Sorting by

×

அமெரிக்கா, இஸ்ரேல் தங்கள் மீது தாக்குதல் தொடுக்க, ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி கொண்டே தான் இருக்கிறது.

தற்போது இஸ்ரேலின் டிமோனா நகரத்தை ஈரான் தாக்கியுள்ளது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

ஏன் இவ்வளவு பரபரப்பு?

டிமோனாவில் தான் இஸ்ரேல் வெளியில் சொல்லாத அணு ஆயுதத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த நகரம் இஸ்ரேலின் இதயம் என்று அழைக்கப்படுகிறது.

இப்படியான இஸ்ரேலின் முக்கிய நகரத்தைத் தான் ஈரான் தற்போது தாக்கியுள்ளது.

இந்த நகரத்தைத் தாக்கிய ஏவுகணைகளை இஸ்ரேலின் தடுப்பு கட்டமைப்புகளால் கூட தடுக்க முடியவில்லை என்று அறிக்கைகள் கூறுகின்றன.

முக்கியமாக,‌ இந்தத் தாக்குதலுக்கு ஈரான் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி உள்ளது.

ஈரான் போர்
ஈரான் போர்

இஸ்ரேல் என்ன சொல்கிறது?

இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது…

“ஈரானிய தீவிரவாத ஆட்சி நீண்ட தூர ஏவுகணையை ஏவுவது இதுவே முதல்முறை. இந்த ஏவுகணை கிட்டத்தட்ட 4,000 கிலோ மீட்டர்கள் வரை சென்று தாக்கும்.

2025-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்த ஆபரேஷன் ரைஸிங் லயனின் போதே, ஈரான் இப்படியான ஏவுகணையைத் தயாரிக்கும் திட்டம் வைத்துள்ளது என்பதை நாங்கள் தெரிவித்தோம். இது ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா நாடுகளுக்கு அபாயம் என்றும் கூறினோம். ஆனால், இதை ஈரான் மறுத்தது.

ஈரானிய தீவிரவாத ஆட்சி உலகத்திற்கே ஆபத்து என்று நாங்கள் தொடர்ந்து சொல்லி கொண்டிருக்கிறோம்.

இந்த ஏவுகணைகள் லண்டன், பாரிஸ், பெர்லின் வரை செல்லும்.

ஈரானிய தீவிரவாத ஆட்சி இதுவரை அந்தப் பிராந்தியத்தில் உள்ள 12 நாடுகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், அவர்களது எல்லைக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய திறனையும் வளர்த்து வருகிறது”.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *