Sorting by

×

ஈரான் மீது இஸ்ரேல் – அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா கமேனி உயிரிழந்தார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியா எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாக இருக்கிறது. இந்தப் போர் தொடங்குவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் சென்றிருந்த பிரதமர் மோடி இஸ்ரேலையும், நெதன்யகுவையும் வானளாவப் புகழ்ந்திருந்தார். நேற்று நெதன்யாகு செய்தியாளர்களைச் சந்தித்தபோதுகூட , “இந்தியா எங்கள் தரப்பில் இருப்பதற்கு நன்றி. பிரதமர் மோடி என் நெருங்கிய நண்பர்” எனப் பேசியிருக்கிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.

அயதுல்லா கமேனி
அயதுல்லா கமேனி

உலகில் சில சட்டங்கள் இருப்பதால் தான்…

அதில், “மார்ச் 1-ம் தேதி இஸ்ரேலும் – அமெரிக்காவும் இணைந்து ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது. பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே, எந்த அறிவிப்பும் இல்லாமல் இறையாண்மைக் கொண்ட நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதும், பதவியில் இருக்கும் ஒரு நாட்டுத் தலைவரைக் கொல்வதும், அந்த நாட்டின் முழு சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் அழிப்பதற்குச் சமம். இது ஐ.நா.சபையின் பிரிவு 2(4) விதிகளின் இதயத்தையே தாக்குவது போன்றது.

உலகில் சில சட்டங்கள் இருப்பதால் தான் நாடுகள் ஓரளவிற்காவது கட்டுப்பட்டு நடக்கின்றன. ஒரு பெரிய தவறு நடக்கும்போது, இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய ஜனநாயக நாடு அதைக் கண்டிக்காமல் மௌனமாக இருந்தால், அந்தத் தவறு “சரியானது” (Normal) என்று ஆகிவிடும். யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்ற நிலை உருவானால், சர்வதேச அளவில் ஒழுங்குமுறை கெட்டுப்போகும்.

இந்தக் கொலை நடப்பதற்கு வெறும் இரண்டு நாட்களுக்கு முன்புதான் பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றிருந்தார். காசாவில் நடக்கும் போரில் பல்லாயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் கொல்லப்படுவதால் உலகமே இஸ்ரேல் மீது கோபத்தில் இருக்கிறது. இந்தச் சூழலில், பிரதமர் இஸ்ரேல் பிரதமரைச் சந்தித்தது, தனது முழு ஆதரவைத் தெரிவித்தது, இந்தியா எப்போதும் கடைப்பிடிக்கும் அமைதி மற்றும் மனிதநேயம் என்ற கொள்கைக்கு எதிராக இருக்கிறது.

ட்ரம்ப் - நெதன்யாகு
ட்ரம்ப் – நெதன்யாகு

மோடியின் ஒருதலைபட்சம்:

பிரதமர் மோடி அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலைப் புறக்கணித்துவிட்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஈரான் நடத்திய பழிவாங்கும் தாக்குதலை மட்டும் கண்டித்தது ஒருதலைப்பட்சமானது.

உலக வரைபடத்தில் தெற்குப் பகுதியில் உள்ள வளரும் நாடுகள் (Global South), மற்றும் பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் இந்தியாவுடன் இருக்கும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இந்த விவகாரத்தில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. ஆனால், இந்தியா மட்டும் இந்தப் படுகொலை குறித்து மௌனமான போக்கைக் கடைப்பிடிப்பது, நமது நீண்டகால நண்பர்களிடமிருந்து நாம் விலகிச் செல்வதைக் காட்டுகிறது.

‘இந்தியாவுக்கு தார்மீகத் தெளிவு இல்லை. எது சரி, எது தவறு என்று சொல்வதில் குழப்பம் இருக்கிறது’ என்று மற்ற நாடுகள் நினைக்கக்கூடும். ஒரு பெரிய தவறு நடக்கும்போது நாம் அதை எதிர்க்காமல் அமைதியாக இருந்தால், அந்தத் தவறை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்றுதான் அர்த்தம். இது வெறும் அரசியல் பிரச்சனை மட்டுமல்ல, உலக நாடுகளுக்கு இடையிலான உறவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

காங்கிரஸின் நிலைபாடு:

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மிகவும் தெளிவாக இருக்கிறது. ஈரானுக்குள் புகுந்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளையும், திட்டமிட்ட படுகொலைகளையும் காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது. இது போன்ற செயல்கள் ஒரு சிறிய போரை உலகப் போராக மாற்றும் ஆபத்து கொண்டவை. எனவே, இந்த விவகாரத்தில் ஈரானின் தலைவர் அயதுல்லா கமேனி மறைவுக்கு இரங்கள் தெரிவித்துகொள்கிறோம்.

brics brazil 2025
brics brazil 2025

இந்தியா உலக அரங்கில் இன்றுவரை மதிக்கப்படுவதற்கு மூன்று முக்கிய கொள்கைகளே காரணம். எல்லா நாடுகளுக்கும் சமமான மரியாதை உண்டு என்ற இறையாண்மை சமத்துவம், ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் மற்றொரு நாடு தலையிடக் கூடாது என்ற கொள்கை வரையறை. எந்தப் பிரச்சனையையும் போர் மூலம் அல்லாமல் பேச்சின் மூலம் தீர்க்க வேண்டும் என்ற அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு.

ஆனால், இப்போது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது இந்தியா அமைதியாக இருப்பது, நம்முடைய இந்த அடிப்படைக் கொள்கைகளையே நாம் கைவிடுவது போல இல்லையா?

வாஜ்பாய் உதாரணம்:

தற்போதைய பாஜக அரசுக்கு, அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நடவடிக்கையே உதாரணம். 2001-ல் வாஜ்பாய் ஈரானுக்கு சென்று, இந்தியாவும் ஈரானும் வரலாற்று ரீதியாக எவ்வளவு நெருக்கமான நண்பர்கள் என்பதை உறுதிப்படுத்தினார். அன்று உங்கள் வாஜ்பாய் மதித்த அந்த நீண்டகால நட்பை, இன்று அதே கட்சியைச் சேர்ந்த தற்போதைய அரசு ஏன் மதிக்கத் தவறிவிட்டது?

மோடி - சோனியா காந்தி
மோடி – சோனியா காந்தி

இந்தியா தன்னை ‘உலகத் தெற்கு’ (Global South – வளரும் நாடுகள்) நாடுகளின் தலைவராகக் கருதுகிறது. இன்று ஒரு நாடு அநியாயமாகத் தாக்கப்படும்போது, கொள்கைக்காக இந்தியா குரல் கொடுக்கத் தயங்கினால், நாளை இந்தியாவுக்கு ஒரு பிரச்சனை வரும்போது மற்ற நாடுகள் எப்படி இந்தியாவை ஆதரிப்பார்கள்? இன்றைய மௌனம், சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு இருக்கும் “நம்பகத்தன்மையை” (Credibility) அழித்துவிடும்.

எனவே, இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க வேண்டும். இந்தப் போர் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை நேரடியாகப் பாதிக்கும் விஷயம். எனவே, நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதித்தே ஆக வேண்டும்.

அமைதி, அகிம்சை, நீதி

“உலகமே ஒரு குடும்பம்” (வசுதைவ குடும்பகம்) என்பது வெறும் மேடைப் பேச்சிற்கான முழக்கம் கிடையாது. நீதி மற்றும் அமைதிக்காகக் குரல் கொடுப்பது கடினமாக இருந்தாலும் குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளை எதிர்க்க வேண்டி இருந்தாலும், இந்தியா தனது கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும்.

இந்தியா வெறும் தெற்காசியாவின் பெரிய அண்ணனாக” மட்டும் இருக்க விரும்பவில்லை; மாறாக உலகிற்கே ஒரு மனசாட்சிக் காவலராக இருக்கவே நீண்டகாலமாக முயன்று வருகிறது. அமைதி, அகிம்சை மற்றும் நீதிக்காக இந்தியா எப்போதும் பேசும் என்ற நம்பிக்கை உலக நாடுகளுக்கு உண்டு. அந்த மரியாதையையும் அந்தஸ்தையும் நாம் தக்கவைக்க வேண்டுமென்றால், இப்போது நடக்கும் அநீதிக்கு எதிராகத் தெளிவான ஒரு நிலைப்பாட்டை இந்தியா அறிவிக்க வேண்டும்.”

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *