Sorting by

×

இஸ்ரேல் ஈரானின் தலைவர்கள் மற்றும் எரிசக்தி ஆலைகளைத் தொடர்ந்து தாக்கி வருகிறது. இதற்குப் பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி ஆலைகளைத் தாக்கி வருகிறது.

அப்படித் தான் நேற்று கத்தாரில் உள்ள எரிவாயு ஆலையை தாக்கியிருக்கிறது ஈரான்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

ஈரான் போர்
ஈரான் போர்

“வளைகுடா நாடுகளில் நடத்தப்படும் தாக்குதல் மீதான கோபத்தில் இஸ்ரேல், ஈரானில் உள்ள மிகப்பெரிய எரிசக்தி வசதியான தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் மீது தாக்குதல் நடத்தியது. ஆனால், அந்தத் தாக்குதல் எரிவாயு வாயலின் மிகச் சிறிய பகுதியையே பாதித்தது.

அமெரிக்காவிற்கு இந்தத் தாக்குதல் குறித்து எதுவும் தெரியாது. கத்தாருக்கும் இந்தத் தாக்குதல் நடக்கும் என்று தெரியாது… அது இந்தத் தாக்குதலிலும் ஈடுபடவில்லை.

ஈரானுக்கும் இது குறித்து தெரியவில்லை. அதனால், அது கத்தாரின் எல்.என்.ஜி எரிவாயு வசதியை தவறாக தாக்கியுள்ளது.

இஸ்ரேல் தாக்காது

கத்தார் மீதான தாக்குதல் போல, ஈரான் அறிவீனமான எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை என்றால், இஸ்ரேல் எரிசக்திகள் மீது தாக்குதல் நடத்தாது.

ஒருவேளை, கத்தார் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால், ஈரான் இதுவரை பார்த்திராத போல, மிகப்பெரிய தாக்குதலில் தெற்கு பார்ஸ் எரிவாயு வயலை முழுவதுமாக அழிக்கும் அமெரிக்கா.

இந்தத் தாக்குதல் நீண்ட காலத்திற்கு ஈரானை பாதிக்கும் என்பதால், அந்த மாதிரியான வன்முறை மற்றும் அழிவிற்கு நான் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை.

ஆனால், கத்தார் எல்.என்.ஜி மீது மீண்டும் தாக்குதல் நடந்தால், நான் தயங்கமாட்டேன்”.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *