ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகிறது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

காமேனியின் மறைவுக்கு சில நாடுகள் கண்டனம் தெரிவித்து இரங்கல் தெரிவித்திருக்கின்றன.
ஆனால் காமேனி மரணம் தொடர்பான விவகாரத்தில் இந்திய அரசு கடைபிடித்து வரும் ‘மௌனம்’ அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகவும் மாறியிருக்கிறது.
இந்தியாவின் இந்த மௌனத்திற்கு காரணம் என்ன?
* 2017 முதல் 2024 வரை, காமேனி பலமுறை இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், அதாவது காஷ்மீர் விவகாரம், CAA சட்டம், டெல்லி கலவரம் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது என இந்திய வெளியுறவு அமைச்சகம் பலமுறை கண்டனமும் தெரிவித்திருந்தது. இது இந்தியாவின் மௌனத்திற்கு முக்கியமான காரணங்களுள் ஒன்று எனக் கூறப்படுகிறது.
* மேலும் இந்தியாவுக்கு நெருக்கமான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் ஈரான் மீது அதிருப்தியில் உள்ளன. குறிப்பாக அமீரகம் மீதான ஈரானின் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா தனது நட்பு நாடுகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு செயல்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

* தவிர அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக, இந்தியா ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை வெகுவாகக் குறைத்து தற்போது வளைகுடா நாடுகளையே அதிகம் சார்ந்திருக்கிறது.
இதனால் ஈரானுடனான பொருளாதாரத் தேவை முன்பை விடக் குறைந்துவிட்டது. இதுவும் இந்தியா மௌனமாக இருக்க ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
