Sorting by

×

எல்.பி.ஜி சிலிண்டருக்கு தட்டுப்பாடு… எல்.பி.ஜி சிலிண்டர் விநியோகத்தில் கட்டுப்பாடு… – இதை தான் ஈரான் போர் தொடங்கியதில் இருந்து அதிகம் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், இந்தப் போரினால் எல்.பி.ஜி சிலிண்டர் மட்டுமல்ல… பல துறைகள் வெவ்வேறு விதங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

முட்டை

தமிழ்நாட்டின் நாமக்கல் ‘முட்டை நகரம்’ என்று தான் அழைக்கப்படுகிறது. இந்தியாவிலேயே முட்டை அதிகம் உற்பத்தி செய்யும் நகரங்களில் நாமக்கலுக்கு இரண்டாவது இடம்.

இங்கே இருந்து மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, வட அமெரிக்காவிற்கு முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

முட்டை
முட்டை

ஈரான் போரினால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கிறது. இதனால், முட்டை ஏற்றுமதியாளர்களால் துபாய், கத்தார், ஓமன் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை.

இந்தப் போரினால் வளைகுடா துறைமுகங்கள், கடலில் மட்டும் கிட்டத்தட்ட 6 கோடி முட்டைகள் குறித்த இடத்திற்கு செல்லாமல் நின்று கொண்டிருக்கின்றன என்று தரவுகள் கூறுகின்றன.

இன்னும் சில நாள்களுக்கு கடலிலேயே முட்டைகள் நின்று கொண்டிருந்தால், அவை கெட்டுப்போகும் வாய்ப்புகள் மிக அதிகம்.

போர் தொடக்க நாளான பிப்ரவரி 28-ம் தேதி ரூ.5.20-க்கு விற்றுக்கொண்டிருந்த ஒரு முட்டையின் தற்போதைய விலை ரூ.4.70.

இதற்கு காரணம் ஏற்றுமதி ஆகாமல் தேங்கிப்போன முட்டைகள் தான்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 95 சதவிகித முட்டைகள் நாமக்கல்லில் இருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அப்போது இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

உணவு

வணிக சிலிண்டர்களின் விநியோகத்திற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மத்திய அரசு. இதனால், இதை சமாளிக்க உணவகங்கள் உணவுகளின் வகைகள், சைட் டிஷ்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளன.

டீ கடைகளில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளன… உணவகங்களிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளன.

உணவு
உணவு

இத்துடன் ஸ்விக்கி, ஜொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனங்களும் தங்களது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.

ஸ்விக்கி ரூ.14.99 ஆக இருந்த தங்களது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ரூ.17.58 ஆக உயர்த்தியுள்ளது. ஜொமேட்டோ ரூ.12.50 ஆக இருந்த பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ரூ.14.90 ஆக உயர்த்தியுள்ளது.

பிரிமியம் பெட்ரோலின் விலையும் ரூ.160 என உயர்த்தப்பட்டுள்ளது.

சூரிய காந்தி, பாம், சோயாபீன்ஸ் எண்ணெய் என சமையல் எண்ணெய்கள் கடந்த மாதம் மட்டும் லிட்டருக்கு ரூ.11 – 20 உயர்ந்துள்ளது.

ரூபாய், பங்குச்சந்தை

விமான டிக்கெட்டுகளின் விலை 25 – 30 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இவை எல்லாம் இப்படி என்றால், இந்தியர்கள் கண்ணாய், மணியாய் பார்க்கும் தங்கத்தின் விலை ஈரான் போர் தொடங்கியதில் இருந்து இறங்குமுகத்தைக் கண்டுள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு ஈரான் போர் தொடங்கியதில் இருந்து சரிந்து வருகிறது. அது ஒரு அமெரிக்க டாலருக்குக் கிட்டத்தட்ட ரூ.95-ஐ தொட்டுவிட்டது.

இந்திய ரூபாய்
இந்திய ரூபாய்

இந்திய பங்குச்சந்தையை எடுத்துக்கொண்டால் 25,000-க்கு மேல் வர்த்தகம் ஆகி கொண்டிருந்த நிஃப்டி, இப்போது 2,000 புள்ளிகள் குறைந்து 23,000-க்கும் கீழ் வர்த்தகம் ஆகி வருகிறது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, இவை மிகக்குறைந்த தகவல்களே. இதனால், விவசாயம் தொடங்கி சுற்றுலா துறை, எரிபொருள் துறை அனைத்தும் ஈரான் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த ஈரான் போரினால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னை என்ன என்பதை கமென்டில் சொல்லுங்க!

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *