ஈரானில் போர் நடப்பதும், அந்த நாடு ஹார்மோஸ் ஜலசந்தியை மூடியதும் உலக அளவிலான கச்சா எண்ணெய் வர்த்தகத்தைக் கடுமையாக பாதித்துள்ளது… அதன் விலையும் தாறுமாறாக ஏறி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (மார்ச் 6), இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க அனுமதிக்கிறோம் என்று ‘பெர்மிஷன்’ கொடுத்திருந்தது அமெரிக்கா.
இந்தியாவிற்கு கொடுத்துள்ள அனுமதி குறித்தும், கச்சா எண்ணெய் அழுத்தத்தைக் குறைக்க வேறு ஏதேனும் அமெரிக்க அரசு செய்யுமா என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் நேற்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவரது பதில்…
“கச்சா எண்ணெயின் தேவை அழுத்தம் அதிகரித்தால், தேவைப்பட்டால் அமெரிக்காவின் மூலோபாய பெட்ரோலிய இருப்பில் (SPR) இருந்து எண்ணெய் விநியோகிப்பேன்.
ஆனால், நம்மிடம் நிறைய எண்ணெய் இருக்கிறது. நம் நாட்டிடம் அதிகளவிலான எண்ணெய் இருக்கிறது. அதனால், இந்தப் பிரச்னை விரைவில் சரியாகும்” என்று தெரிவித்துள்ளார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
