Sorting by

×

பிப்ரவரி 21-ம் தேதியான இன்று திருச்சியில் மாபெரும் மக்கள் மாநாட்டை நடந்துகிறது நாம் தமிழர் கட்சி. கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் உருக்கமான மடலை வெளியிட்டுள்ளார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சீமான்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி ஆலம்பட்டிபுதூரில் நம்முடைய நாம் தமிழர் கட்சி பேரெழுச்சியாக நடத்தவிருக்கும் மாற்றத்திற்கான மக்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலிருந்தும் தங்கள் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் சூழ பெருந்திரளாக வருகை தரவிருக்கும் என்னுயிர்ச் சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம், உங்கள் ஒவ்வொருவரையும் சந்திக்க பேராவலுடன் காத்திருக்கிறேன். வரும்வழியில் ஆரவாரம் ஏதுமின்றி, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு அமைதியான முறையில் உங்கள் பயணம் கட்டுகோப்பான இனிய பயணமாக அமைய வேண்டும்.

தமிழ்த்தேசிய தலைவரின் மீது நீங்கள் கொண்டுள்ள பேரன்பும், பெருமதிப்பும் சத்தியமானால், அந்த மாதலைவனின் பெரும்புகழுக்கு சிறுகளங்கமும் ஏற்படாதவாறு இத்தனை நாட்கள் எத்தகைய ஒழுக்கத்துடனும், கட்டுப்பாடுடனும் நடந்துகொண்டீர்களோ, அதையே உலகத் தமிழினமே உற்றுநோக்கும் இம்மாபெரும் மாநாட்டிலும் கடைப்பிடிப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

சீமான்
சீமான்

உங்கள் அனைவரையும் மாநாட்டுத்திடலில் சந்திக்க பெரும் உணர்வெழுச்சியுடனும் உற்சாகத்துடனும் உங்கள் அண்ணன் சீமான் காத்திருக்கிறேன்” என்ற உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் சீமான்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாநாட்டை ஒருங்கிணைத்திருக்கிறது நா.த.க. இந்த மாநாட்டில் என்ன நடக்கும், சீமான் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியிலேயே ஏற்பட்டிருக்கிறது.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *