Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran
கோவை: உடுமலைப்பேட்டை அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே 17 வயது சிறுமி தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் உடலில் மாற்றங்கள் அதிகளவில் தென்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்று பரிசோதித்தனர். பரிசோதனையில் சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. சிறுமியை விசாரித்த போது 3 சிறுவர்கள் உட்பட 9 நபர்கள் தன்னை அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக சிறுமி தெரிவித்துள்ளார். இதனையடுத்து அச்சிறுமியின் உறவினர்கள் உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 3 சிறுவர்கள் உட்பட 9 நபர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்த நிலையில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஜெய காளீஸ்வரன், மதன்குமார், பரணிகுமார், பிரகாஷ், நந்தகோபால், பவா பாரதி ஆகிய 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டு 3 பேர் சிறுவர்கள் என்பதால் கோவை சிறுவர்கள் கூர்நோக்கு பள்ளியில் சேர்க்கப்பட்டனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூர்நோக்கு பள்ளிக்கு அவர்களை அழைத்து சென்றனர். இந்த நிலையில் நேற்று இரவு 15வயதுடைய சிறுவன் கை கழுவுவதற்காக பயன்படுத்த கூடிய சோப்பாயிலை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரை நேற்று இரவு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 3 பேர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்ட நிலையில் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post உடுமலைப்பேட்டை அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி..!! appeared first on Dinakaran.