Sorting by

×

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உயிரோடு இருக்கிறாரா… இல்லையா?

– இது தற்போது ஈரான் போரை சுற்றியுள்ள சர்ச்சைகளில் ஒன்றாகும்.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கிய போர் இன்றுடன் பத்தொன்பது நாளாக தொடர்ந்து வருகிறது.

இந்தப் போர் தொடங்கிய முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொலை செய்யப்பட்டார்.

கமேனி
கமேனி

ஈரான் தாக்குதல்

இதற்குப் பதிலடியாக கடந்த மார்ச் 2-ம் தேதி, இஸ்ரேல் ஜெருசேலத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தை தாக்கியதாக கூறியது ஈரான். இதில் நெதன்யாகு இறந்துவிட்டதாக தகவல்கள் பரவின.

ஆனால், அன்றே ஈரான் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் பகுதிகளை நெதன்யாகு பார்வையிட்டுப் புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஈரான் போர் தொடர்ந்து வருவதையடுத்து நெதன்யாகு இஸ்ரேல் தொலைகாட்சியிலும், தனது சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து பேசி வருகிறார்.

அப்படித் தான், கடந்த 13-ம் தேதி, இஸ்ரேல் அரசு தொலைகாட்சியில் தோன்றி போர் குறித்து பேசினார். அதில் சில இடங்களில் நெதன்யாகுவின் வலது கையில் ஆறு விரல்கள் தெரிந்தது.

இதை ‘டெக்னிக்கல் தவறு’ என்று இஸ்ரேல் மறுத்தாலும், பலர் ஈரானின் தாக்குதலில் நெதன்யாகு இறந்துவிட்டார்… அதை மறைக்க அவர் பேசுவதுபோல, ஏ.ஐ வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என்று விமர்சித்தனர்.

இந்தச் சர்ச்சை அப்படியே கடந்து போய்விடும் என்று நினைத்தால், அது தொடர்ந்து பூதாகரமாகிக் கொண்டே போனது.

காபி ஷாப் வீடியோ

இதற்கு ஒரு ‘எண்ட் கார்டு’ போட, கடந்த 15-ம் தேதி நெதன்யாகு காபி கடை ஒன்றிற்கு சென்று வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதில் தனக்கு ஐந்து விரல்கள் தான் உள்ளது என்றும், ‘நான் காபிக்காக இறப்பேன்’ என்றும் கேலி செய்து பேசியிருந்தார்.

ஆனால், இந்த வீடியோ சர்ச்சைகளுக்கு வலு சேர்ப்பது போல அமைந்துவிட்டது.

ஆம்… நெதன்யாகுவின் காபி ஷாப் வீடியோவையொட்டி எழுப்பப்படும் கேள்விகள்…

> அந்த வீடியோவில் நெதன்யாகு ‘காபி’யை ஒரு சிப் குடிப்பார். ஆனால், குடித்தப் பின்னரும், அந்தக் கப்பில் முன்பிருந்த அதே அளவு காபி நிரம்பியே இருக்கிறது.

> மேலும் காபியை ஒரு சிப் குடித்துவிட்டு, கீழே கப்பைக் கொண்டு வரும்போது, அதில் உள்ள காபியில் எந்தவித அசைவும் இருக்காது. இது புவியீர்ப்பு விசைக்கு எதிரானது.

> அடுத்ததாக, அவரது உதட்டின் அசைவுகளும், ஆடியோவும் சரியாக இல்லை.

> காபி குடித்ததும் அவரது உதட்டில் ஒட்டிய கறை, அடுத்த ஃபிரேமில் இல்லை.

> அந்தக் கடையில் பில் கவுண்டரில், மாஸ்க் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்த வாடிக்கையாளர் நிற்கிறார். ஒரு கடையின் பில் கவுண்டரில் வாடிக்கையாளர் நிற்பாரா?

> நெதன்யாகு பொதுவாகவே இடது கை பழக்கம் உள்ளவர். பின் எப்படி வலது கையில் காபி கப்பை வைத்திருக்கிறார்?

> அந்த வீடியோவில் முதல் ஃபிரேமில் வரும் மெஷினில் ரிசிப்ட்டின் தேதி மார்ச் 13, 2024 என்று குறிப்பிட்டுள்ளது.

இப்படி ஏகப்பட்ட கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன.

அந்த வீடியோவை நாம் பார்க்கும்போது, நெதன்யாகு ஒரு சிப் காபி குடித்ததும்… அவரது உதட்டில் கறை ஒட்டியிருக்கும் ஃபிரேமிற்கும், அடுத்த ஃபிரேமிற்கும் சின்ன டிரான்சிஷன் தெரிகிறது.

ஆக, அதை இரண்டு ஷாட்களாக கருதலாம். அதனால், முதல் ஷாட்டிலும், இரண்டாவது ஷாட்டிலும் காபி டம்ளர் நிறைந்தே இருந்திருக்கலாம். உதட்டில் கறையும் துடைக்கப்பட்டிருக்கலாம்.

பில் கவுண்டரில் நின்றிருந்த மாஸ்க், கூலிங் கிளாஸ் அணிந்திருந்த நபர் வாடிக்கையாளர் தான் என்பதற்கு எந்த ஆதாரமும் அந்த வீடியோவில் இல்லை.

மோதிரம் காணவில்லை

இந்த வீடியோ மேலும் மேலும் பெரிதாக… சர்ச்சைகளைக் கிளப்ப மலைப் பிரதேசத்தில் இருப்பது போல, இன்னொரு வீடியோவை 16-ம் தேதி வெளியிட்டார் நெதன்யாகு.

அதில் அவரது இடது கையில் போட்டிருந்த மோதிரம் திடீரென மறைகிறது. இதை குறிப்பிட்டு ஏ.ஐ வீடியோ என்கிற விமர்சனம் மீண்டும் மீண்டும் பெரிதானது.

ஆக, அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இஸ்ரேலின் அமெரிக்க தூதரை சந்தித்த வீடியோவை நேற்று வெளியிட்டிருக்கிறார் நெதன்யாகு.

லேட்டஸ்ட் வீடியோ

அந்த வீடியோவில், தூதரான மைக் ஹக்கபீ, ‘எங்களது அதிபர் (ட்ரம்ப்) நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? என்பதை பார்த்து வர கூறினார்’ என்று கேட்கிறார்.

அதற்கு நெதன்யாகு, ‘ஆம் மைக்… நான் உயிரோடு தான் இருக்கிறேன்’ என்று பதில் அளிக்கிறார்.

இப்படி வீடியோக்கள் மூலம் தொடர்ந்து நெதன்யாகு பதிலளித்துக்கொண்டே இருக்கிறார். ஆனால், ‘அவர் உயிரோடு இருக்கிறாரா?’ என்கிற சர்ச்சை இன்னும் ஓய்ந்தம்பாடில்லை.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *