நியூசிலாந்துக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கையின் இடம் வலுவாகியுள்ளது.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை அணி குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை அணியின் வெற்றி சதவிகிதம் 55.55 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு அடுத்தபடியாக இலங்கை தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
நல்ல வாய்ப்பு
நியூசிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக முன்னேற இலங்கை அணிக்கு நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது.
Sri Lanka on the rise
The updated #WTC25 Standings ➡️ https://t.co/p0YGmtCYmo pic.twitter.com/3AhwnV13m1
— ICC (@ICC) September 29, 2024
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இலங்கை அணி தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இந்த இரண்டு தொடர்களில் உள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெறுவதன் மூலம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தவரிசையில் இலங்கையின் வெற்றி சதவிகிதம் 69.23 ஆக அதிகரிக்கும். 69.23 சதவிகித வெற்றிகளுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை அணி முதல் இரண்டு இடங்களில் நிறைவு செய்ய அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.
சனத் ஜெயசூர்யாவின் பயிற்சியாளர் பதவிக்காலம் நீட்டிக்கப்படுகிறதா?
இந்த கடினமான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு இலங்கை அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக முன்னேறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
