Sorting by

×

2022-ம் ஆண்டு தொடங்கிய உக்ரைன்-ரஷ்யா போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. இந்த நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்திருக்கிறது. ரஷ்யாவும் அந்த நாடுகள் மீது பொருளாதார தடை விதித்து எதிர்வினையாற்றியது. ரஷ்யா – உக்ரைன் என இரு நாடுகளுக்கும் ஆதரவு தராத சீனா, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் சீனா சென்றிருக்கிறார். 5வது முறையாக பதவி ஏற்ற பிறகு மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இது.

அதிபர் புதின்

அவரை சீன அதிகாரிகள் விமான நிலையத்திலிருந்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, இந்த சந்திப்பின் மூலம், இரு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு, சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதின், சீன பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்,“உக்ரைன் நெருக்கடியைத் தீர்க்க ரஷ்யாவுக்கு உதவும் சீனாவின் உண்மையான விருப்பத்தை பாராட்டுகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

‘ரேபரேலி தொகுதியும் நேரு குடும்பமும்’ – ரேபரேலியை ராகுல் தேர்ந்தெடுத்த பின்னணியும் களநிலவரமும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *