Sorting by

×

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய பிறகு சில தகவல்களை டெல்லி மேலிடத்திற்கு தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். இன்று மாலைக்குள் தி.மு.க வுடன் எண்ணிக்கை இறுதியாகும் என்கிற தகவல் கூட கசிகிறது. 

தி.மு.க  – காங்கிரஸ் கூட்டணி சிக்கலுக்கு  பிரதான காரணமாக இருப்பது தொகுதி எண்ணிக்கையே. இதை சரிகட்டவே இப்போது இரண்டு தரப்பிலும் வேகமாக பேச்சுக்கள் நடக்கிறது. எண்ணிக்கையை காரணம் காட்டி கூட்டணியை உடைக்க வேண்டாம் என காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பு ராகுலுக்கும் அழுத்தம் கொடுத்துள்ளனர். 

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் கூட்டணி விசயங்களை கார்க்கே பார்த்துக்கொள்ளட்டும் என ராகுல் முடிவெடுத்துள்ளார். சோனியா, கார்க்கே இவர்களுடன் இப்போது சிதம்பரம் ஆகியோர் கூட்டணியை இறுதி செய்யும் வகையில் காய் நகர்த்தி வருகிறார்கள்.

39 இடங்கள் வேண்டும் என்று காங்கிரஸ் கறார் காட்டி வந்த நிலையில், தற்போது 31 இடங்களை வாங்கிக்கொள்ளும் நிலைக்கு இறங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தரப்பில் தற்போது ரெடி செய்ய உள்ள லிஸ்டில் 31 தொகுதிகளே இருக்கும் என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பினர்.  அதே நேரம் ராகுல் காந்தி 36 இடங்களை கேளுங்கள் என்று சொல்லியதற்கு, எண்ணிக்கையில் கறார் காட்ட வேண்டாம் என கார்க்கே சொல்லியுள்ளாராம்.

மற்றொருபுறம், தி.மு.க  தரப்பில் 25 தொகுதிகள் என்கிற எண்ணிக்கையை சற்று அதிகரிக்கும் மூடில் உள்ளார்கள். அதவாது 27 அல்லது 28 சட்டமன்ற தொகுதிகளை இறுதி செய்யலாம் என தி.மு.க முடிவெடுத்துள்ளது. அதே போல் ராஜ்யசபாவில் ஒரு இடத்தையும் ஒதுக்க முன்வந்துள்ளார்கள். இன்று மாலைக்குள் இதை இறுதி செய்ய வேண்டும் என சிதம்பரத்திடம் கறாராக சொல்லியுள்ளார் ஸ்டாலின். 

ஸ்டாலின் - சிதம்பரம்
ஸ்டாலின் – சிதம்பரம்

காங்கிரஸ் தரப்பில் எம்.எல்.ஏ சீட்டை குறைத்துக்கொண்டு ராஜ்யசபாவில் மேலும் இடத்தை கேட்கலாம். 2028-ல் சிதம்பரம் உள்ளிட்ட சிலரின் பதவிகாலம் முடிவுக்கு வருகிறது. அப்போது, ஒரு இடத்தை தி.மு.க விட்டு தரட்டும் என்று சொல்லியுள்ளார்கள். அதையும் சிதம்பரம் நாசூக்காக தி.மு.க விடம் சொல்லியுள்ளார். சிதம்பரம் நகர்த்திய இந்த அரசியல் நகர்வு தான் இறுதியில் காங்கிரஸ் – தி.மு.க இடையே இணக்கத்திற்கு காரணமாக இருக்கபோகிறது என்றே தெரிகிறது.!

Loading…

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *