இன்னும் சில நாள்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டது ஒரு பக்கம் வைரலானது என்றால், இன்னொரு பக்கம் நிர்மலா சீதாராமன் கூறியுள்ள ஒரு கருத்து பரவலாக விமர்சனங்களையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள பதிவில், கடந்த 10 ஆண்டுக்கால மோடி ஆட்சியில் வங்கிகளை வலுப்படுத்தி இருப்பதாகவும், எந்தவொரு தொழிலதிபருக்கும் கடன்களைத் தள்ளுபடி செய்யவில்லை என்றும் கூறியிருக்கிறார். அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளதாவது,
நிர்மலா சீதாராமன்“அரசியலுக்கு வருவதை என் மனைவி விரும்பவில்லை’’ – ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் ஓப்பன் டாக்!
“காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எந்தவிதமான விதிமுறைகளையும் பின்பற்றாமல் தகுதியற்ற தொழிலதிபர்களுக்குக் கடன்களை வாரி வழங்கியிருக்கின்றன. இதனால் சிறு, குறு தொழில்கள் மற்றும் ஸ்டார்ட்அப் தொழில்முனைவில் ஈடுபட்டிருந்த கோடிக்கணக்கானவர்களின் கடன் தேவைகளும் கனவுகளும் முடக்கப்பட்டன.
இதற்கு, வங்கிகளில் காணப்பட்ட நிதி நிர்வாகக் குளறுபடிகளே முக்கியமான காரணமாக இருந்தன. வங்கிகளில் காங்கிரஸ் ஆட்சியாளர்களின் தலையீடும் செல்வாக்கும் தலைவிரித்து ஆடியதே இதற்குக் காரணம்.
ஆனால், மோடி அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு, இந்த அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. வங்கிகளை ஏமாற்றும் மோசடிக்காரர்களிடமிருந்து மீட்டெடுக்கவும், நாட்டின் நிதிநிலையை வலுப்படுத்தவும் தேவையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
2015-ல் பெரிய அளவிலான வங்கி மோசடிகள் கண்டறியப்பட்டு அவற்றை விசாரிக்க திவால் சட்டம் (Insolvency and bankruptcy code) கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் திவால் ஆகும் நிறுவனங்களிடமிருந்து சொத்துகளைப் பறிமுதல் செய்து கடன்கள் மீட்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அதே போல், தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் சட்டம் 2018-ல் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்கீழ் பொருளாதாரக் குற்றவாளிகள் மீது வழக்குகள், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ரூ.250 கோடிக்கும் மேல் உள்ள கடன்களை திறம்பட கண்காணிப்பதற்காக சிறப்பு கண்காணிப்பு முகமைகள் பயன்படுத்தப்பட்டன.
பாஜக – காங்கிரஸ்
ஆனால், எதிர்க்கட்சிகள் எப்போதும்போல் பொய்களைப் பரப்புவதையே வழக்கமாக வைத்திருக்கின்றன. 2014 மற்றும் 2023-க்கு இடையில் எந்த ஒரு தொழிலதிபருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. பலருக்கு ரைட்-ஆஃப் (Write-offs) மற்றும் தள்ளுபடி (Waiver) இரண்டுக்கும் உள்ள வேறுபாடு தெரியவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
மோடி ஆட்சியில் வங்கிகளை வலுப்படுத்தியதால்தான் 2023-24 நிதி ஆண்டில் இந்திய வங்கித் துறை ரூ.3 லட்சம் கோடி நிகர லாபம் ஈட்டி சாதனை படைத்திருக்கிறது. பொதுத் துறை வங்கிகள் மட்டுமே இதில் ரூ.1.41 லட்சம் கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளன” என்று கூறியிருக்கிறார்.
சரி, நிதியமைச்சர் சொல்வது உண்மைதானா, உண்மையிலேயே பெரிய கார்ப்பரேட் நிறுவனங்குகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லையா, வாராக் கடன்கள் எந்தளவுக்கு மீட்கப்பட்டிருக்கின்றன என்பன குறித்து, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் இணை செயலாளர் சி.பி.கிருஷ்ணனிடம் கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில் இனி…
சி.பி.கிருஷ்ணன்“ஆப்ஷன் டிரேடிங் செய்வதால் குடும்ப நிதிநிலைக்கு ஆபத்து…” – நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை!
“கடந்த 10 வருடங்களாகவே மோடி தலைமையிலான அரசு வார்த்தை ஜாலங்களால் மக்களை ஏமாற்றிவரும் செயலைத்தான் செய்து வருகிறது. இப்போது மட்டும் உண்மையை ஒப்புக்கொள்ளவா போகிறார்கள்?
சரி, நிர்மலா சீதாராமன் கூறியிருக்கும் தகவல்கள் உண்மையா என்ற விஷயத்துக்கு வருவோம். அவர் குறிப்பிடுவது போல `ரைட்-ஆஃப்’ (Write-offs) மற்றும் தள்ளுபடி (Waiver) ஆகிய இரண்டும் வெவ்வேறுதான் அதில் சந்தேகமே இல்லை. Waiver என்றால் தள்ளுபடி செய்வது, ரைட்-ஆஃப் என்றால் தள்ளிவைப்பது.
வங்கிகள் கடன்களின் வட்டி போன்ற கணக்கீடுகளில் வராமல் இருக்கும் கடன்களின் பங்கு அதிகமாகும்போது பல சிக்கல்கள் இருப்பதால், வாராக்கடன்களை ரைட்-ஆஃப் செய்வார்கள். அதாவது, அந்தக் கடன் வங்கிப் புத்தகத்தில் இருக்கும், அதை மீட்பதற்கான வேலைகளும் நடக்கும்; ஆனால், நிதிநிலை அறிக்கைகளில் இடம்பெறாது. இது கடன் தள்ளுபடி அல்லதான்.
ஆனால், இப்படி `ரைட்-ஆஃப்’ செய்யப்பட்ட கடன்களில் எவ்வளவு கடன்களை இதுவரை மீட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால்தான் இதில் இருக்கும் பித்தாலட்டமே புரியும்.
2014 முதல் 2023 வரையிலான 9 ஆண்டுகளில் ரூ.14.56 லட்சம் கோடி கடன்கள் `ரைட்-ஆஃப்’ செய்யப்பட்டிருக்கின்றன. இதில் ரூ.7.40 லட்சம் கோடி கடன்கள் பெரிய கார்ப்பரேட்டுகளின் கடன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
`ரைட் ஆஃப்’ செய்யப்பட்ட ரூ.14.56 லட்சம் கோடி கடன்களில் ரூ.2.04 லட்சம் கோடி கடன்கள் மட்டுமே மீட்கப்பட்டிருப்பதாக 2023 மார்ச் மாதம் மக்களவையில் அப்போதைய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கராத் எழுத்து மூலம் கூறியிருக்கிறார். அப்படி எனில், மீதமுள்ள ரூ.12.5 லட்சம் கோடி கடனுடைய நிலை என்ன, அதை என்ன கணக்கில் சேர்ப்பது, அந்தக் கடன் இனிமேலும் வரும் என்று எப்படி நம்ப முடியும். திரும்ப வராது என்ற நிலைமையில் உள்ள இந்தக் கடனை தள்ளுபடி ஆனதாகத்தானே் சொல்ல முடியும்.
வங்கிகள்`தமிழ்நாட்டிடமிருந்து பெற்ற வரியை விடவும், அதிகமாக நிதி கொடுத்திருக்கிறோம்!’ – நிர்மலா சீதாராமன்
அதே போல, திவால் சட்டம் என்கிற நடைமுறையை அமல்படுத்தி பெரிய புரட்சி செய்துவிட்டதாகக் கூறுகிறார்கள். திவால் சட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் கோடி அளவிலான கடன்களுக்கான வழக்குகள் நடக்கின்றன. இதில் சுமார் ரூ.3 லட்சம் கோடி என்ற அளவில்தான் கடன் மீட்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள கடன்களை எப்போது மீட்கப் போகிறார்கள்?
அதைவிட மோசமானது, தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்று கதை விடுவதுதான். விஜய் மல்லையாவில் ஆரம்பித்து, மெகுல் சோக்ஸி, ஜதின் மேத்தா, நிரவ் மோடி, லலித் மோடி, சண்டேசரா பிரதர்ஸ் என ஒரு நீளமான பட்டியலே இருக்கிறது.
இவர்கள் அனைவருமே பா.ஜ.க ஆட்சிக் காலத்தில்தான் நாட்டை விட்டு தப்பியோடி இருக்கிறார்கள். இவர்களில் ஒருவரையாவது நம் நாட்டுக்குத் திரும்பக் கொண்டுவந்திருக்கிறார்களா, இவர்கள் வங்கிகளிலிருந்து வாங்கி ஏமாற்றிய கடன்களை எவ்வளவு மீட்டிருக்கிறார்கள்? இவர்கள் எல்லோரும் வெளிநாடுகளில் சொகுசாகத்தானே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
மோடி
பா.ஜ.க அரசின் நாடகத்தை எல்லாம் பொருளாதார நிபுணர்களும், எதிர்க்கட்சிகளும் வெளிக்கொண்டு வர முயற்சித்தால், இவர்கள் எதைப் பற்றியும் பேச முடியாது. இவர்கள் பேச்சை சாமான்ய மக்கள் நம்பி ஏமாந்துவிடுகிறார்கள் என்று நினைப்பதைப் பார்க்கும்போதுதான் வேதனையாக இருக்கிறது” என்றார்.
தேர்தல் முடிவுகள் எப்படி வரப்போகிறது என்று பார்ப்போம்!
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
