Sorting by

×

நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ரிசல்டுக்காக காத்திருக்கும் இவ்வேளையில் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டியவர்களின் பட்டியலை தி.மு.க, அ.தி.மு.க மட்டுமின்றி நாம் தமிழர் கட்சியும் சத்தமின்றி தயார் செய்திருக்கிறது. இதுகுறித்து நா.த.க வட்டாரங்களில் விசாரித்தோம்.  

`நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதும் சென்னை அண்ணாநகரில், வேட்பாளர்கள் உள்பட மாநிலம் தழுவிய நா.த.க நிர்வாகிகள் அழைத்து உள்ளரங்கு கூட்டத்தை நடத்தினார் நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

நாம் தமிழர் பிரசாரம் | சீமான்

அக்கூட்டத்தில் ’தேர்தல் சமயத்தில் பணியாற்ற வேண்டியது குறித்த வழிகாட்டல்களையும் வேட்புமனு தாக்கல் விவகாரங்களை கவனமாக மேற்கொள்வது குறித்தும் பேசிய சீமான், “உட்கட்சி முரண்களை கைவிடுங்கள், தேர்தல் நெருக்கங்களில் வெறிக் கொண்டு வேலை செய்யுங்கள், `எறும்பு, தேனீ’ போன்ற பெயர்கள் கொண்ட குழுக்கள் மறைமுகமாக உங்கள் பணிகளை கண்காணிக்கும்’ என அலர்ட் கொடுத்திருக்கிறார். தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அவர் சொன்னதுபோலவே புகார் பட்டியலை சீமானிடம் சமர்பித்திருக்கிறது அந்த குழுக்கள்’ என்கிறார்கள் விவரப்புள்ளிகள்.  

பொதுக்குழுவில் சீமான்

இதுகுறித்து நம்மிடம் பேச ஆரம்பித்த தலைமைக்கு நெருக்கமான சிலர், “நாடாளுமன்ற தேர்தலில் பிரசார களத்தில் உரிய முறையில் பணியாற்றாமல், உள்ளடி வேலை பார்த்தவர்களையும் குழு அமைத்து கண்காணித்தது உண்மைதான். ஆர்வம்காட்டாத வேட்பாளர்கள், பிரசாரத்துக்கே வராத பொறுப்பாளர்கள் என தொகுதிவாரியான லிஸ்ட் தலைமைக்கு வந்திருக்கிறது. மேலும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்துகொண்டு கட்சிக்கு இடைஞ்சல் கொடுப்பவர்களும் அந்த ரிப்போர்ட்டில் அடக்கம். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்தபிறகு தொகுதி வாரியாக பெறும் வாக்குகளை ஒப்பீட்டு அந்த ரிப்போர்ட் மீதான நடவடிக்கையை எதிர்பார்க்கலாம். அந்த புகார் பட்டியலில் தொகுதி நிர்வாகிகள் தொடங்கி தலைமைக்கு நெருக்கமான புள்ளிகள் வரை இருக்கிறார்கள். குறிப்பாக எந்த தொகுதியிலாவது கடந்துமுறையைவிட வாக்கு சதவீதம் குறைந்தால் எதிர்பாராத அதிரடி மாற்றங்களை சீமான் மேற்கொள்வார். ” என்றனர் சூசகமாக.  

கலந்தாய்வு கூட்டத்தில் சீமான்

இதுகுறித்து நம்மிடம் பேசிய நா.த.க நிர்வாகிகள் சிலர், “வேலை செய்யாதோர் மீது நடவடிக்கை எடுப்பது ஒருபக்கம் இருக்கட்டும். நா.த.க-வின் அமைப்பு முறையிலேயே ஒருசில மாற்றங்கள் கொண்டு வரவேண்டியுள்ளது. தேர்தல்களில் எம்.பி, எம்.எல்.ஏ சீட்டுகளை வெல்ல வேண்டுமென பெரிதும் விரும்புகிறது தலைமை. ஆனால் 15 ஆண்டுகளை தொட்டிருக்கும் நா.த.க-வின் கட்சி கட்டமைப்பு வருத்தப்படும் அளவுக்குதான் இருக்கிறது. அதன்மீதான கவனம் முதன்மையாக இருக்க வேண்டும். மேலும் நாம் தமிழர் கட்சி வளர்ச்சிக்கு சமூக வலைதளங்களிலும், விவாத நிகழ்ச்சிகளிலும், மேடைகளிலும் சிறந்து விளங்குபவர்களுக்குத்தான் முக்கிய பொறுப்பு வழங்கப்படுகிறது.

நாம் தமிழர் பொறுப்பாளர்கள்

உதாரணமாக, இளைஞர், மாணவர், பாசறை பொறுப்பாளர்களாக இருப்பவர்கள் பேச்சாளர்கள் தானே தவிர, களப் பணியாளர்கள் அல்ல. கட்சியை கட்டமைத்திடும் பொறுப்பு கொண்டவர்கள் கருத்தியல் தளத்தில் கட்சியை வலிமைப்படுத்துவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். ஆனால், களப் பணியாளர்களை கண்டறிந்து பொறுப்பு கொடுப்பதை இரு திராவிடக் கட்சிகளும்  காலங்காலமாக செய்து வருகின்றனரே தவிர செய்தி தொடர்பாளர்களுக்கு அல்ல” என்றனர் அதிருப்தியுடன்.

சீமான்

தலைமைக்கு நெருக்கமான சிலரோ “ஒரு அரசியல் கட்சி சிறந்த நிர்வாகிகளை நியமிப்பதும், வேலைசெய்யாத தூக்கியெறிவதும் இயல்புதானே!” என்றனர் கூலாக.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

“திமுக எங்களை வலிமையான போட்டியாளராக பார்க்கிறது..!” – நாம் தமிழர் சே.பாக்கியராசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *