Sorting by

×

ஈரான் போரின் எதிரொலியை விட, ஹார்முஸ் ஜலசந்தி மூடல் தான் உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது.

இந்த ஜலசந்தி மூலம் தான் உலகின் ஐந்தில் ஒரு பங்கு வர்த்தகம் நடந்து வருகிறது.

அது மூடப்பட்டிருப்பதால், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் பிற நாடுகளைச் சென்று சேர முடியவில்லை. இதனால், இந்தப் போரால் ஈரான், இஸ்ரேல், அமெரிக்காவைத் தாண்டி, பெரும்பாலான உலக நாடுகள் பாதித்துள்ளன.

இந்த ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தார்… ஆனால், அது இந்த நாள் வரை சாத்தியப்படவில்லை.

ட்ரம்ப்ப் பதிவு
ட்ரம்ப்ப் பதிவு

இப்போது தனது ட்ரூத் பக்கத்தில் இன்னும் சில நாள்களில் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுவிடும் என்று பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது…

“இன்னும் கொஞ்சம் காலம் தான், நம்மால் ஹார்முஸ் ஜலசந்தியை எளிதாக திறந்து, எண்ணெய்யை எடுத்து, பெரும் செல்வம் ஈட்ட முடியும்.

இது உலகிற்கே பெரிய நிகழ்வாக இருக்கும் தானே?”.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *