தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், குழுவின் இணைத் தலைவரான மயிலாடுதுறை எம்.பி சுதா, மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ-க்கள், மேயர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம்
கூட்டத்தில் குழுவின் தலைவரும், தஞ்சாவூர் எம்.பி-யுமான முரசொலி, “இது போன்ற கூட்டங்களில் அதிகாரிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அனைத்து துறையை சேர்ந்தவர்களும் வந்திருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். என்னிடம் உள்ள பட்டியலின் படி பெயரை வாசிப்பேன் நீங்கள் கைகளை உயர்த்த வேண்டும்” என அட்டன்டென்ஸ் எடுத்தார். ஒவ்வொரு பெயராக முரசொலி வாசிக்க, அந்த துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கையை உயர்த்தி தாங்கள் கூட்டத்திற்கு வந்திருப்பதை உறுதி செய்தனர். அப்போது சங்கடத்தில் நெளிந்த சில அதிகாரிகள், “நாம என்ன ஸ்கூல் ஸ்டூடன்ட்டா, கையை உயர்த்தச் சொல்லி அட்டென்டன்ஸ் எடுக்கிறார்’ என முணுமுணுத்தனர்.
தஞ்சாவூர் எஸ்.பி இதில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து ஏன் எஸ்.பி கூட்டத்திற்கு வரவில்லை என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து எஸ்.பி, வேளாங்கன்னி பேராலய கொடியேற்று விழாவிற்கான பாதுகாப்பு பணிக்கு சென்றிருப்பதாக எம்.பி-யிடம் தெரிவிக்கப்பட்டது. “ஒவ்வொரு அதிகாரியும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் செல் நம்பரை வைத்து கொள்ள வேண்டும்.
முரசொலி எம்.பி தலைமையில் நடைபெற்ற கூட்டம்
சிலர், எங்கள் செல் நம்பர்கூட இல்லாமல் இருக்கின்றனர். மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் ஏராளமானோ் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கின்றனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து 40 நாள்களுக்குள் அதற்கான தீர்வு காண வேண்டும். அதன் பின்னர், மக்கள் பிரதிநிதிகளை வைத்து நிகழ்ச்சி நடத்தி மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். மக்கள் அதிகாரிகளிடத்தில் எதுவும் கேட்க மாட்டார்கள். எங்களிடம்தான் கேட்பார்கள். அதனால் இந்த முறையை கடைபிடிக்க வேண்டும்” என்றார்.
Assam : முஸ்லிம் திருமணச் சட்டம் ரத்து; UCC-ஐ அமல்படுத்துகிறதா அஸ்ஸாம் பாஜக அரசு?!
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
