ஐசிசியின் புதிய தலைவராக பிசிசிஐ முன்னாள் செயலர் ஜெய் ஷா இன்று (டிசம்பர் 1) பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 5 ஆண்டுகளாக பிசிசிஐ செயலராக ஜெய் ஷா செயல்பட்டு வந்தார். ஐசிசியின் தலைவர் பொறுப்பிலிருந்த கிரெக் பார்க்ளே மூன்றாவது முறையாக, ஐசிசியின் தலைவர் பொறுப்பைத் தொடர்வதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையும் படிக்க: அடிலெய்டு டெஸ்ட்டில் மார்னஸ் லபுஷேன் வேண்டாம்: முன்னாள் ஆஸி. வேகப் பந்துவீச்சாளர்
இந்த நிலையில், ஐசிசியின் புதிய தலைவராக பிசிசிஐ முன்னாள் செயலர் ஜெய் ஷா இன்று (டிசம்பர் 1) பொறுப்பேற்றுக் கொண்டார்.
A new chapter of global cricket begins today with Jay Shah starting his tenure as ICC Chair.
Details: https://t.co/y8RKJEvXvl pic.twitter.com/Fse4qrRS7a
— ICC (@ICC) December 1, 2024
ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள 5-வது இந்தியர் என்ற பெருமை ஜெய் ஷாவைச் சேரும். அவருக்கு முன்பாக, ஐசிசியில் தலைவர் பொறுப்பில் ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், ஷஷாங் மனோகர், என்.ஸ்ரீநிவாசன் ஆகியோர் இருந்துள்ளனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
