Sorting by

×

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு படத்தினை இயக்கியவர் விக்னேஷ் கார்த்திக். திட்டம் இரண்டு படத்துக்குப் பிறகு அடியே படத்தினை இயக்கினார்.

இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் விக்னேஷ் கார்த்திக் ஹாட் ஸ்பாட் படத்தை இயக்கினார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஹாட் ஸ்பாட் படத்தை கே .ஜே. பி. டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்தது. சிக்ஸர் என்டெர்டைன்மெண்ட் சார்பில் தினேஷ் இப்படத்தை வெளியிட்டார்.

ஹிப்ஹாப் ஆதியின் பி.டி. சார் டிரைலர்!

இப்படத்தில் கலையரசன், கெளரி கிஷன், சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ் சோபியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ஹாட் ஸ்பாட் திரைப்படம் அமேசான் பிரைம் மற்றும் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் தற்போது காணக் கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *