நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், போடி தொகுதியில் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2001 – 2006 ஆம் ஆண்டு தேர்தல்களில் பெரியகுளம் தொகுதியிலும் 2011, 2016, 2021 ஆண்டு தேர்தல் காலங்களில் போடி தொகுதியிலும் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டார். இந்த 5 – தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்துள்ளார். திமுக வெற்றிக்காக தென்மாவட்டங்களில் அவர் பிரசாரப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார்.
விரைவில் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலிலும் போடி தொகுதியில் அவர் போட்டியிட திமுக தலைமைக் கழகத்திடம் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
போடி தொகுதியில் அவர் மீண்டும் களம் இறங்கினால், அவரை எதிர்த்து யாரை நிறுத்துவது என்ற ஆலோசனையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக அ.தி.மு.க பாஜக கூட்டணியில் போடி தொகுதியில் யார் நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து வலிமையான வேட்பாளரை நிறுத்த அ.தி.மு.க.வினர் ஆலோசித்து வருகின்றனர். கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதாவும் போடி தொகுதியை கேட்டு விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த தொகுதியில் `நமது மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன’த் தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா களம் இறக்கப்படலாம் என்ற பேச்சு போடி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா அதிமுக-வுடன் கூட்டணி வைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். எனவே போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா களம் இறங்க அதிமுக, பாஜக தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல நமது மக்கள் முன்னேற்றக் கழகம், த வெ.க உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும்அக்கட்சி வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க-வுடன் கூட்டணி அமைத்தாலும், ஜெகநாத் மிஸ்ராவே போடி தொகுதியில் களமிறங்கலாம் என்று பேசப்படுகிறது.

எனவே இந்த தேர்தலின் போது போடி தொகுதி பரபரப்பான அரசியல் களமாக இருக்கப் போகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
