Sorting by

×

ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்த மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன் புதிதாக ‘எம்.ஜி.ஆர் அண்ணா திமுக’ என்ற பெயரில் ஒரு கட்சியை தொடங்கியிருக்கிறார்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், ‘என்னுடைய அறிவும் அனுபவமும் நாட்டுக்கு பயன்பட வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு பொதுச்செயலாளர் ரஞ்சித் குமார்தான் என்னை கட்சி தொடங்க வைத்தார்.

பண்ருட்டி ராமச்சந்திரன்
பண்ருட்டி ராமச்சந்திரன்

அடையாள அரசியலும் கொள்கை அரசியலுமாக அரசியல் உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. எல்லாருக்கும் வாய்ப்பளிக்கக்கூடிய ஒரு சமுதாயத்தை, பிறப்பின் அடிப்படையில் பிரிவினையற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவது இந்த அரசியல் இயக்கத்தின் நோக்கம்.

பிராமணனாகப் பிறந்ததால் தலித்தாகப் பிறந்ததால் முஸ்லிமாகப் பிறந்தததால் இந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை என யாரும் சொல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும். யாருக்கும் நாம் புறக்கணிக்கப்பட்டோம் என்கிற எண்ணம் இருக்கக் கூடாது.

ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மதம் என்பதால் சிங்களர்கள் என்ன ஆனார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்தியாவும் அந்த நிலையை நோக்கிச் செல்கிறதோ என தோன்றுகிறது. இது அழிவுப்பாதை.

சமத்துவ சமவாய்ப்பு சமுதாயத்தை நோக்கிச் செல்லும் அறநிலைதான் என்னுடைய அரசியல்.

இந்த இயக்கம் தேர்தலில் ஈடுபடாது.

பண்ருட்டி ராமச்சந்திரன்
பண்ருட்டி ராமச்சந்திரன்

எங்களிலேயே யாரேனும் போட்டியிட விரும்பினால் எங்களுடன் ஒத்துப்போகும் கொள்கை உடையவர்களின் கட்சியோடு அவர்களின் சின்னத்தில் போட்டியிடுவார்கள்.

தேர்தலிலில் நிற்பது பணத்தைப் போட்டு பணத்தை எடுப்பது மட்டும்தானா. ஒரு புது சமுதாயத்தை உருவாக்குவதுதான் என்னுடைய இலக்கு. தேர்தல் என்பது இடையிடையே வரும் சடங்குகள். வேண்டுமானால் அதில் கலந்துகொள்வோம். ஆனால், அதுவே அரசியலல்ல.

இந்த கட்சியை தொடக்கி வைப்பது நானாக இருக்கலாம். தொடர்வது பொது மக்களாக இருக்கட்டும். ஓ.பி.எஸ் அத்தியாயம் ஓவர்!

அரசியல் என்பது ஒருவருக்கானதல்ல.

நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கிறது. ஓ.பி.எஸ்-க்காக உயிரையா விட முடியும்? வரும் தேர்தலில் திமுக-வுக்கும் விஜய்க்கும் தான் போட்டி’ என்றார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *