சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில், பூங்கா ரயில் நிலையத்தில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
முழுமையாக ரத்து: சென்னை கடற்கரை – தாம்பரத்துக்கு மே 15, 16, 17 ஆகிய தேதிகளில் இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை – தாம்பரத்துக்கு மே 16, 17, 18 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய 2 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
