Sorting by

×

Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran

சென்னை: கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் தங்களது கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. சென்னையில் தொடர்ந்து சில நாட்களாக 100 டிகிரி வெயில் வாட்டி வந்தது. இதனால் பகல் 11 மணிக்கு மேல் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்தாலும், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் இன்னமும் குறையவில்லை.
இதனால் திறந்த வெளியில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் கடுமையாக சிரமப்படுகிறார்கள். இதை அறிந்த தமிழக அரசு கட்டுமான தொழிலாளர்களின் உடல்நலம் பாதிப்படைவதை தடுக்கும் பொருட்டு கட்டுமான நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் வெயில் தாக்கம் குறைந்ததால் கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் தங்களது கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வெப்ப அலை விளைவுகள் மீண்டும் அதிகரித்து அதன் உச்சத்தை அடையும் வரை வழக்கம் போல் வேலை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
The post கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் தங்களது கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *