Sorting by

×

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “கூட்டங்களில் கத்திக் கத்தியே செத்துப்போ என்று என்னை மக்கள் சபித்துவிட்டார்கள்” என ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (ஏப்ரல்.8) பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது பேசிய அவர், “மலையாள நடிகர் மம்முட்டியிடம், ஏன் நீங்கள் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை? என்று சிலர் கேட்டிருக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
சீமான்

அதற்கு அவர், “எங்கள் மக்கள் தங்கள் தலைவர்களை திரையரங்குகளில் தேடுவதில்லை” என்று பதிலளித்திருக்கிறார்.

ஆனால் இங்கு மக்கள் திரையரங்குகளைத் தவிர வேறு எங்கும் தலைவர்களை தேடுவதில்லை.

முன்பு திரையரங்கில் படம் பார்க்கும்போது விசிலடித்தீர்கள். இப்போது தெருவில் விசிலடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

கூட்டங்களில் இப்படியே கத்திக் கத்தியே பேசி செத்துப்போ என என்னை சபித்துவிட்டனர்.

மக்களை ஏமாற்றுவது எளிது. ஆனால் மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்துவது கடினம்.

நானும் 15 ஆண்டுகளாக கத்திக் கத்திப் பேசி பார்த்து விட்டேன். உங்கள் காதில் விழமாட்டிங்கிறது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
சீமான்

சுடுகாட்டில்போய் பேசியிருந்தால் கூட பாவம் பார்த்து நான்கு பிணமாவது எழுந்து வந்திருக்கும்.

இந்த முறையாவது மானம், ரோஷம், கோபம் எல்லாம் வருகிறதா? என்று பார்ப்போம்” என்று ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *