Sorting by

×

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம வழக்குத் தொடர்பான மறு விசாரணை மே 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற ஸ்ரீராம் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பான வழக்கு விசாரணை கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, மாணவி தரப்பில் ஆஜராகி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பு கேமரா பதிவு, மாணவியின் செல்போன் உரையாடல், முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட விபரங்கள் கோரினர்.

​இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *