ஒவ்வொரு முறை நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும் பிரதமர் மோடி தியானம் செய்யும் படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு பேசுபொருளாகும். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் மோடி தியானம் மேற்கொண்டார். அதேபோல, 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, இமயமலையில் கேதர்நாத் குகையில் தியானம் மேற்கொண்டார். தற்போது நாடாளுமன்றத் தேர்தல் முடியும் நிலையில், கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் இன்று முதல் 3 நாள்களுக்குத் தொடர்ச்சியாக, 45 மணி நேரம் மோடி தியானம் செய்யவிருக்கிறார்.
கேதார்நாத் பனிக்குகையில் மோடி
இந்த 3 நாள்களும், பாதுகாப்புப் படையினர், மருத்துவக் குழுவினர், கேந்திரா பணியாளர்கள் மட்டுமே விவேகானந்தர் பாறையில் தங்கி இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. இதையொட்டி, 3,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடற்படையினர், கடலோர காவல் படையினரும் தொடர்ந்து ரோந்து பணியில் சுற்றிக் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மோடியின் தியான திட்டம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “ தியானம் என்பது யார் வேண்டுமானாலும் செய்யலாம்… ஆனால், யாராவது தியானம் செய்யும் போது கேமராவை எடுத்துச் செல்வார்களா… விதவிதமாக போட்டோ எடுப்பார்களா… நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வெளியாவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்புவரை, தியானம் என்ற பெயரில், ஏசி அறையில் சென்று உட்காருகிறார். மோடியின் இந்த செயல் குறித்து எந்தக் கட்சியும் ஏன் எதுவும் சொல்லவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. இது எனக்கு வருத்தமாக இருக்கிறது.
மம்தா பானர்ஜி
ஒரு நோக்கத்திற்காக பரமாத்மாவால் அனுப்பப்பட்ட கடவுள் எனக் கூறிக்கொள்பவர், ஏன் தியானம் செய்யவேண்டும். மற்றவர்கள்தானே அவருக்காகத் தியானம் செய்வார்கள்… கன்னியாகுமரியில் மோடியின் தியானத்தைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால், அது தேர்தல் நடத்தை விதி மீறல். தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்வேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
`நவீன் பட்நாயக்கின் உடல்நிலை திடீரென மோசமானதில் சதி; நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் விசாரணை!’ – மோடி
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
