Sorting by

×

கரூர்: கரூரில் கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் – ஆண்டாள்கோவில் புதூரைச் சேர்ந்த ரமேஷ் மகன் அஸ்வின் (12). அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் விஷ்ணு (11), இளங்கோ மகன் மாரிமுத்து (11) ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் மூவரும் அதே பகுதியில் உலா பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை காலை 3 பேரும் வீட்டில் விளையாடுவதாக வீட்டில் சொல்லி விட்டு சென்றுள்ளனர். ஆனால், மாலை நேரமாகியும் அவர்கள் மூவரும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள், அந்தப் பகுதியில் உள்ள இடங்கள் மற்றும் உறவினர் வீடுகளிலும் தேடி உள்ளனர். ஆனால், அவர்கள் கிடைக்கவில்லை

​இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *