Sorting by

×

தில்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20-ம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லி மதுபான (கலால்) கொள்கை முறைகேடு தொடா்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகள் கே.கவிதா அமலாக்கத் துறையால் கடந்த மாதம் 15-ஆம் தேதி ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.

கவிதாவுக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையடுத்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன்பு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த புதிய குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாமா என்ற உத்தரவையும் மே 20ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *