Sorting by

×

Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran

சென்னை: தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் சேரன் (20). இவர் கொருக்குப்பேட்டை இளைய முதலி தெருவில் உள்ள ஒரு கல்லூரியில் 3ம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். மேலும் பார்ட் டைமாக பாரிமுனையில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் வீட்டிற்கு வந்தபோது வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வண்ணாரப்பேட்டை போலீசார், சேரன் வந்த பைக்கை மடக்கி சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் ₹8.5 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து சேரனிடம் கேட்டதற்கு, கடை உரிமையாளர் இந்த பணத்தை என்னிடம் கொடுத்து வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டு காலையில் கடைக்கு வரும்போது கொண்டு வா என்று கூறினார், அதன்படி பணத்தை வீட்டிற்கு கொண்டு வந்தேன் என்று சேரன் கூறினார். மேலும் அதற்குரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்து தண்டையார்பேட்டை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். மேலும் அந்த பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது
The post கல்லூரி மாணவரிடம் ரூ.8.50 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *