Sorting by

×

வேலூர், காட்பாடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க-வின் முன்னாள் மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், “நாடு வளர்ச்சியடைந்த பாதையில் போக வேண்டுமென்றால், மோடி மறுபடியும் பிரதமராக வர வேண்டும். எதிர்க்கட்சிகள் சுயநலத்துக்காக ஓட்டு கேட்கின்றன. பிரதமர் மட்டுமே பொதுநலனுக்காக ஓட்டு கேட்கிறார். தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் `இந்தியா’ கூட்டணி ஆட்சிதான் நடக்கிறது. இன்றைக்கு `2.5 டி.எம்.சி தண்ணீர் உடனே வழங்க வேண்டும்’ என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கர்நாடகாவுக்கு ஆணை பிறப்பித்திருக்கிறது. இதற்கு, தமிழக அரசு எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை.

தமிழிசை சௌந்தரராஜன்

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, `காவிரி நீர் கேட்டுப் போராட்டம் நடத்துகிறேன். நடைப்பயணம் போகிறேன்’ என்றார். காவிரி நீரைக் கொண்டு வரவில்லை. டாஸ்மாக் தண்ணீரைத்தான் அதிகமாக கொண்டுவந்திருக்கிறார் ஸ்டாலின். இதுதான் அவர்களின் சாதனை. முற்றிலுமாக தமிழக அரசு தோல்வியடைந்திருக்கிறது. எல்லா இடங்களிலும் கஞ்சாவும், வன்முறை கலாசாரமும் அதிகரித்திருக்கிறது. காவல்துறைக்கும், கஞ்சா விற்பனைச் செய்பவர்களுக்கும் மிகப்பெரிய நெட்வொர்க்கும் இருக்கிறது.

தி.மு.க-வில்தான் சாதிக் இருந்தார். திரைத்துறையினருக்கும், தி.மு.க-வைச் சேர்ந்தவர்களுக்கும் கஞ்சா பரவுவதில் அதிக பங்குகளும் இருக்கிறது. கஞ்சா கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும். இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல், கல்வியில் சிறிய மாற்றம் கொண்டுவந்தவுடன் காவி மயமாகிவிட்டது என்றார்கள். உண்மையில் கல்வி காவி மயமாகவில்லை. கலைஞர் மயமாகியுள்ளது.

தமிழிசை சௌந்தரராஜன்

8-ம் வகுப்பில் கலைஞரை படிக்க ஆரம்பித்து, 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பிலும் கலைஞரைப் படிக்க வேண்டுமா?. ஒருத் தலைவரை பற்றி எத்தனை பாடப்புத்தகங்களில் வைப்பீர்கள். அறியப்படாத எத்தனையோ தலைவர்களின் தியாகம் வெளியில் தெரியாமல் இருக்கிறது. அவர்களை பற்றிய பாடங்கள் புத்தக்கங்களில் இடம்பெற வேண்டும். குழந்தைகளின் மனதில் விதைப்பது, நல்ல விதைகளாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. `இந்த ஆட்சிதான் காமராஜர் ஆட்சி’ என்று அண்ணன் இளங்கோவன் சொல்வது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனவே, கல்வியில் வழிகாட்டு முறை கொண்டு வரப்பட வேண்டும்’’ என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *