Sorting by

×

தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் கட்சியின் வசம் இருந்து வந்த விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியை அவர்களிடமிருந்து கைப்பற்றியதுடன், அடுத்த மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியவர் விஜயதரணி.

காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு மதிப்பில்லை என்று கூறி 2024-ம் ஆண்டு தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சத்தியமூர்த்தி பவனிலிருந்து கமலாலயத்திற்கு தாவினார். ஆனால் அப்போது முதல் இப்போது வரை அந்தக் கட்சியில் முக்கியப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. தேர்தல் நெருங்கும் சூழலில், “மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?”, “பாரதிய ஜனதாவில் சேர்ந்த முடிவு தவறென நினைக்கிறீர்களா?” என்பன போன்ற சில கேள்விகளுடன் அவரைச் சந்தித்தோம்.

சத்திய மூர்த்தி பவன்

“’கட்சி கொறடா, மூன்று முறை எம்.எல்.ஏ என காங்கிரஸில் பிசியாக இருந்தீங்க. வரும் தேர்தலில் மீண்டும் விளவங்கோடு மக்கள்கிட்ட ஓட்டு கேட்டு போக வாய்ப்பு உள்ளதா?”

“கட்சிதான் அதுகுறித்து முடிவெடுக்கும். தொடர்ந்து மக்கள் பணி செய்ய வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரே காரணத்தினாலேயே காங்கிரஸ் கட்சியில இருந்து வெளியேறினேன். பா.ஜ.க தலைமைக்கும் இது தெரியும். அதனால தலைவர்கள் முடிவெடுப்பாங்க. அதுக்கு இன்னும் அவகாசம் இருக்கு.”

கமலாலயம்
கமலாலயம்

“ஆனாலும் பெரிய பொறுப்புகள் எதுவும் பி.ஜே.பி.யில் தரப்பட்டதாகத் தெரியவில்லையே?”

“மாநில அளவில் செயற்குழு உறுப்பினரா இருக்கேன். இதுவே முக்கியமான பொறுப்புதான். மாவட்டத்தில் நடக்கிற கட்சிப் பணிகள் குறித்து விவாதிக்கிறாங்க. தவிர எந்தவொரு முக்கிய முடிவுன்னாலும் கருத்து கேக்கறாங்க. இதுக்கு மேல என்ன செய்யணும்?

23 வருஷம், அதாவது என் இளமைப் பருவத்தையெல்லால் காங்கிரஸ் கட்சிக்காகச் செலவு செய்தேன். அதுக்குப் பிறகுதன் அங்கீகாரம் தந்தாங்க. ஆனாலும் தொடர்ந்து மக்கள் பணி செய்யணும்னு நான் நினைச்சப்ப இடையூறு தந்தாங்க. அதனாலேயே ஒருகட்டத்தில் கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டேன். ஆனா அப்படி வெளியேறிய பிறகும் எம்.பி. தேர்தல் சீட்டுக்கு ஆசைப்பட்டுதான் கட்சி மாறினதா வதந்தி பரப்பினாங்க. அது உண்மையில்லை. இங்க வந்து 23 மாதங்கள்தானே ஆகுது. ஆதனால பா.ஜ.க. வில் அங்கீகாரம் கிடைக்கலைங்கிறது நிஜமில்லை.”

NDA கூட்டணி மாநாடு
NDA கூட்டணி மாநாடு

“தேர்தல் கள நிலவரம் எப்படி இருக்கு. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கா?

“களம் எங்களுக்குச் சாதகமாகவே இருக்கு. எதிர்க்கட்சி கூட்டணி ஓவர் லோடுல போயிட்டிருக்கு. போற வர்றவங்களையெல்லாம் கூட்டணிக்கு இழுக்கிறார் முதல்வர் ஸ்டாலின். வாக்கு சதவிகிதமே இல்லைனு நிரூபணமான கட்சிகளைக் கூட கணக்குக்காக சேர்த்திருக்காங்க. காரணம் தோல்வி பயம். எங்க கூட்டணியில எந்தச் சிக்கலும் இல்லை.. வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கு.”

tvk

“காங்கிரஸ் கட்சி திமுகவுடன் நீடிக்குமா அல்லது வெளியேறி தவெக பக்கம் போகுமா? அந்தக் கட்சியில் பல வருடம் இருந்த உங்க அனுபவத்தில் சொல்லுங்களேன்.”

“காங்கிரஸ் கட்சியில் இன்னைக்கு தேதிக்கு 99 சதவிகிதம் பேர் திமுக கூட்டணி வேண்டாம்னு சொல்றதா தெரிய வருது. இவங்க சூடு சொரணை உள்ளவர்கள். 1 சதவிகிதம் பேருக்கு அது கிடையாது. அவங்க திமுக அரசுகிட்ட இருந்து சில பல சலுகைகளை அனுபவிச்சுகிட்டு அங்கதான் இருக்கணும்னு சொல்லிட்டு வர்றாங்க. யார் பேச்சை கேக்கணும்கிறதை கட்சியின் அகில இந்திய தலைமைதான் தீர்மாணிக்கணும்.” என்றார்.

முழுமையான பேட்டியை காண…

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *