Sorting by

×

காங்கிரஸ் கட்சி, யாருடன் கூட்டணி வைப்பது என்கிற குழப்பத்திற்கு தீர்வு காண, டெல்லியில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. தி.மு.க-வுடன் கூட்டணியை தொடர்ந்தால் தமிழக நிர்வாகத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், கூட்டணி மாற்றம் என்றால் தலைமையிலும் மாற்றம் இருக்கும் என்கிற தகவலும் கசிய ஆரம்பித்துள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சி தி.மு.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த  காத்துள்ளது. இன்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் சென்னை வந்து கூட்டணி பேச்சுவார்த்தையை துவக்குவார் என்று நேற்று காங்கிரஸ் கட்சி தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் இன்று காலையிலிருந்து கிரிஷ் ஜோடாங்கர் வருவது குறித்து எந்த தகவலும் காங்கிரஸ் கட்சி தரப்பில் இல்லை. இந்நி்லையில் 28-ம் தேதி சனிக்கிழமை அன்று தி.மு.க -வுடன் பேச்சுவார்த்தையை  காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கும் என்று தகவல் வெளியானது. 

செல்வப்பெருந்தகை, கிரிஷ் சோடங்கர்
செல்வப்பெருந்தகை, கிரிஷ் சோடங்கர்

ஆனால் இந்த தகவலையும் காங்கிரஸ் மற்றும் தி.மு.க என இரண்டு கட்சிகளும் அதிகார பூர்வமாக தெரிவிக்கவில்லை. மற்றொரு புறம்  காங்கிரஸ் தரப்பு த.வெ.க-வுடன்  பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் சொல்லபட்டது. இப்படி பல்வேறு செய்திகள் காங்கிரஸ் சுற்றி எழுந்துவரும் நிலையில்,டெல்லியில் இன்று காலை முக்கிய ஆலோசனை ஒன்று நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் தற்போது கேரளாவில் உள்ளார்கள். இவர்கள் இருவரும் இன்று காலை டெல்லி சென்றுள்ளார்கள். டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவுடன்  இவர்கள் ஆலோசனை செய்துள்ளார்கள்.

தி.மு.க-வுடன் முதல்கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தலாம். அதில் நாம் கேட்கும் எண்ணிக்கையில் தொகுதிகளை தராவிட்டால், கூட்டணியில் அடுத்த ஆப்சனை நோக்கி நாம் நகரலாம் என்று முடிவெடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள செல்வபெருந்தகை தி.மு.க -வுடன் கூட்டணி வைப்பதில் தீவிரமாக உள்ளார்.   த.வெ.கவுடன் கூட்டணி வைப்பதை இவர் ஆதரிக்கவில்லை.

மற்றொருபுறம் தி.மு.க கூட்டணி வேண்டாம், த.வெ.கவுடன் பயணிக்கலாம் என்று  காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஸ்குமார் உள்ளிட்டவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இதனால் தி.மு.க கூட்டணி தொடர வேண்டாம் என்று முடிவெடுத்தால் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மாற்றம் வரும் என்கிற தகவல் டெல்லியிலிருந்து வெளியாகியுள்ளது.

மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி

த.வெ.கவுடன் கூட்டணி பேசும் முன்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் ராஜேஷ்குமாரை உட்கார வைத்து பேச்சுவார்த்தை நடத்த வேணுகோபால் உள்ளிட்டவர்கள் திட்டமிடுகிறார்கள் என்ற தகவலும் பரபரக்கிறது. கடைசி கட்டமாக எப்படியும் தி.மு.க கூட்டணிக்குள் காங்கிரஸ் கட்சியை கொண்டுவந்துவிட வேண்டும் என்று செல்வபெருந்தகை உள்ளிட்டவர்கள் தீவிரமாக உள்ளார். இதனால் கூட்டணியில் மாற்றம் வருமா,? வந்தால், காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வருமா? என்கிற கேள்விக்கு இரண்டு நாட்களுக்குள் முடிவு வந்துவிடும் என்றே தெரிகிறது. !

Loading…

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *