மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி முழுப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் ஏஐசிசி தலைமையகத்தில் செய்தியாளர்களுடன் கார்கே பேசினார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்தால் அது ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டு வரும்.
பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் 421 முறை கோவில்-மசூதி பிரிவினை பற்றிப் பேசியுள்ளார். மேலும் கடந்த 15 நாள்களில் மட்டும் காங்கிரஸ் பெயரை 232 முறையும், மோடி தனது பெயர் 758 முறையும் பயன்படுத்தியுள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது ஜாதி மற்றும் மதத்தின் மீது வாக்குகளைக் கோரக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை அவர் மீறிப் பேசியுள்ளார்.
வேலையில்லா திண்டாட்டம்பற்றி அவர் ஒருமுறை கூட பேசவில்லை என்று கார்கே குற்றம் சாட்டியுள்ளார். ஜூன் 4-ம் தேதி மாற்று அரசை அமைப்பதற்கான அதிகாரத்தை மக்கள் வழங்குவார்கள் என்று நம்பிக்கை உள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
