Sorting by

×

உயிரிழந்த கோகுல்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ஜம்புகுளம் கிராமத்தில் வசித்து வந்தவர் 21 வயதான கோகுல். இவரது தந்தை பெயர் சின்னசாமி.

இந்நிலையில், இவர் நேற்று இரவு தனது பசு மாட்டிற்கு தீவனம் அளிப்பதற்காக தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். போகும் வழியில், எத்திராஜ் என்பவரின் நிலத்தை கடந்து அவர் சென்றுள்ளார்.

இந்த நிலையில்,அங்கே காட்டுப்பன்றிகளை தடுப்பதற்காக எத்திராஜ் மின்வேலி அமைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இதை கண்டறியாமல் அதை கடக்க முயன்ற போது, தவறுதலாக கோகுல் மின்வேலி மீது விழுந்துவிட்டர்.

உடனே, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற சோளிங்கர் போலீசார் கோகுலின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *