கோவை: பொள்ளாச்சி அடுத்த செல்லப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தினமணி புகைப்படக் கலைஞர் அஜய் ஜோசப்(35) சாலை விபத்தில் சிக்கி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதன்கிழமை(மே 29) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தினமணி நாளிதழ் கோவைப் பதிப்பில் புகைப்படக் கலைஞர் அ.அஜய் ஜோசப் (35). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் சிக்கி, தலையில் பலத்த காயம் அடைந்தார்.
ரூ. 4 கோடி விவகாரம்: நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் ஆஜராக சம்மன்
இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை(மே 29) காலை உயிரிழந்தார்.
இவருக்கு மனைவி சபீனா (34), மகன் அபி (12), மகள் பின்ஷி (9) உள்ளனர்.
இவரது உடல் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பொள்ளாச்சி அடுத்த வடக்கிபாளையம் செல்லும் வழியில் செல்லப்பம்பாளையம் பிரிவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது. தொடர்ந்து காபுலிபாளையம் மயானத்தில் மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
தொடர்புக்கு 86102 42646, 96776 35212.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
