நடிகை நிவேதா பெத்துராஜ் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விடியோ வைரலாகியுள்ளது.
ஒருநாள் கூத்து படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். பின்னர் பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், சங்கத் தமிழன் படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பூ என்ற படம் ஜியோ சினிமாஸில் வெளியாகியது.
சமீபத்தில் தமிழ்நாடு ஆளுங்கட்சித் தலைவர் ஒருவர் நிவேதா பெத்துராஜுக்கு துபையில் ரூ. 50 கோடி மதிப்பில் சொகுசு பங்களா வாங்கிக் கொடுத்ததாக கடந்த சில நாள்களாக யூடியூப் சேனல்களில் செய்திகள் பரவின. பின்னர் இது குறித்து நிவேதா பெத்துராஜ் விளக்கமளித்ததும் குறிப்பிடத்தக்கது.
பணப் பிரச்னை: கேன்ஸ் விருதுக்குப் பிறகு நடிகை கனி குஸ்ருதி உருக்கம்!
இந்நிலையில், ஹைதராபாத்தில் நிவேதா பெத்துராஜ் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் விடியோ இணையத்தில் வைரலானது. காரின் பின்பக்கத்தை திறக்கும்படி காவல்துறையினர் கேட்கும்போது மறுப்பு தெரிவிக்கிறார். விடியோ எடுக்கும் நபரையும் தடுத்து விடுவார். இந்த விடியோ இணையத்தில் வைரலானது.
Actress #NivethaPethuraj argued and hesitated to open backside trunk of the car and scolded the recorded person…
Her expressions made Policemen to doubt on herself…#Tollywood #NivethaPethuraj #Police pic.twitter.com/49W6DNPcdL
— Anchor_Karthik (@Karthikkkk_7) May 29, 2024
நடிகை அஞ்சலியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட பாலகிருஷ்ணா!
ரசிகர்கள் இது ஏதோ படத்தின் புரமோஷனாக இருக்குமென கமெண்டுகளில் கூறி வருகிறார்கள். தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சொப்பன சுந்தரி படத்தின் தெலுங்கு ரீமெக்கில் நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் புரமோஷன் விடியோவாகத்தான் இது இருக்குமென ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
