Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் மே 21-ல் கூடுகிறது. டெல்லியில் மே 21-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30-ம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது. மே மாதம் தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி. காவிரி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது. முன்னதாக மே 16-ம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.
The post காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் மே 21-ல் கூடுகிறது appeared first on Dinakaran.
The post காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் மே 21-ல் கூடுகிறது appeared first on Dinakaran.
