காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து இதனை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கத்ராவில் நடைபெறும் பேரணி ஒன்றிலும் பிரதமர் உரையாற்ற உள்ளார். ஆரம்பத்தில் கத்ரா மற்றும் ஸ்ரீநகர் பாதையில் ஒரே ஒரு வந்தே பாரத் ரயில் மட்டுமே இயக்கப்படும்.
பொதுமக்களின் வரவேற்பைப் பொறுத்து இந்தப் பாதையில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் ஜம்மு-காஷ்மீருக்கு சென்ற ரயில்வே பாதுகாப்பு ஆணையர், கத்ரா மற்றும் காஷ்மீர் இடையே ரயில் சேவைக்கு அனுமதி வழங்கினார்.
213 ஆப்கன் அகதிகளைத் தாயகம் கடத்திய பாகிஸ்தான்!
தற்போது, பள்ளத்தாக்கில் உள்ள சங்கல்டன் மற்றும் பாரமுல்லா இடையேயும், கத்ராவிலிருந்து நாடு முழுவதும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுவாக காஷ்மீர் பாதையில் பகல் நேரத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படுகின்றன, மாலையில் பாதுகாப்புப் பணிகள் திரும்பப் பெறப்படுவதால், பள்ளத்தாக்கில் மாலை நேரங்களில் எந்த ரயில்களும் இயக்கப்படுவதில்லை.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
