தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டி பகுதியில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் இன்று (புதன்கிழமை – மாா்ச் 4) நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விமானத்தில் திருச்சி வந்த விஜய், அங்கிருந்து காரில் செங்கிப்பட்டி வந்தார்.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.
விஜய் vs ஸ்டாலின் சார்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், “வேலூர் நிர்வாகிகள் சந்திப்பில் நான் தான் தமிழ்நாடு என்றுக் கூறியிருந்தேன், தமிழ்நாட்டு மக்களின் ஒரே உண்மையான பிரதிநிதியாக நாம்தான் இருக்கிறோம் என்பதை உணர்த்தவே. தமிழ்நாடு vs ஸ்டாலின் சார்… அதாவது விஜய் vs ஸ்டாலின்.

இது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்.. இதில் எப்படி பா.ஜ.க வந்தது எனக் கேள்வி கேட்டிருந்தேன். அதையும், விஜய் பாஜகவுக்காகப் பேசுகிறார் எனத் திரித்துப் பேசினார்கள். நம் சிறுபான்மைச் சகோதரர்களை ஏமாற்றும் வேலை இனி செய்ய முடியாது என்பதைத் தெரிந்து திரித்துப் பேசும் வேலையைச் செய்கிறார்கள்.
சென்னையில் டெல்லி டெல்லி எனப் பேசுவதும், அடித்தக் கொள்ளைக்கு ரெய்டு வந்துவிட்டால் அதே டெல்லிக்கு வெள்ளைக் கொடி பிடிப்பதும் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டைக் காப்பது, பிழைக்க வைப்பது திமுக ஸ்டாலின்தான் எனப் பேசுவது வேலைக்கு ஆகாது. இப்போது சிறுவர்கள் கூட ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி எனச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.
தமிழ்நாட்டு அணி டெல்லி அணி எனப் பேசுகிறார்கள். கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை டெல்லி அணி தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. கிரிக்கெட்டில் விசிலை போடுவது சிஎஸ்கே – வரக்கூடிய தேர்தலிலும் விசிலை போடப்போவது டிவிகே.
டெல்லி அணி மட்டுமல்லா எல்லா அணியையும் தவெக அடித்து நொறுக்கும். எனக்கும் என் மக்களுக்கும் நடுவில் யாராலும் உள்நுழைய முடியாது. இது ஒரு அம்மா – பையன். அப்பா – மகன், அண்ணன் – தம்பி, அக்கா – தம்பி உறவு. இது மற்றவர்களுக்கு தான் எலக்சன் என்னையும் என்னை நேசிக்கும் மக்களுக்கும் எமோஷன்.
ஊழலற்ற, உண்மையான, சமூக நீதியை நிலை நாட்ட, நம் ஆட்சியை அமைப்பீர்கள் என்ற உறுதி மொழியை நீங்கள் எனக்கு நீங்கள் தர வேண்டும். இந்த விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்கள் தானே… உண்மையிலேயே கொடுப்பீர்கள் தானே… இந்த விஜய்யை நம்புகிறீர்கள் தானே…

நாம் ஒவ்வொரு நாளும் சாப்பிடும் பொழுது, நமக்கே அறியாமல் விவசாயிகளுக்கு நன்றி சொல்வோம். எனக்கு அடுத்த ஜென்மத்தின் மீது நம்பிக்கை கிடையாது. அப்படி அடுத்த ஜென்மம் இருந்தால் நான் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும் என விரும்புகிறேன். எனக்கு விவசாயத்தைப் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
மற்றவர்களைப் போல நானும் டெல்டாகாரன் தான் என உங்கள் காதுகளில் டால்டா ஊத்துவதற்கு வரவில்லை. விவசாயிகளைப் பற்றித்தான் எனக்கு தெரியாது. அவர்கள் படும் கஷ்டங்கள் எனக்கு நன்றாக தெரியும்.” என்றார்.
(More Details will Updated here)
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
