சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 2019-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி சார்பில் `குடிநீர் மையம்’ எனும் பெயரில் குடிநீர் சேவை தொடங்கப்பட்டது. இது சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நான்கு இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. இது இங்கு சுற்றிப் பார்க்கும் மக்களுக்கு மட்டும் பயன்படுவது அல்ல, சென்னை வந்து வேறு அடைக்கலம் இன்றி மெரினா கடற்கரையில் தங்கி இருப்பவர்களுக்கும் இந்த குடிநீர் வசதி என்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மெரினா குடிநீர் மையம்
அதிலும் தற்போது நாம் சந்தித்து வரும் கடும் கோடைக் காலத்தில் மிகவும் உபயோகமாக இருந்திருக்கும். ஆனால் தற்போது அந்த நான்கு குடிநீர் மையங்களில் வெறும் ஒரேஒரு இடத்தில் மட்டும் தான் எந்தவித சேதமும் இல்லாமல் மக்களுக்கு இன்றளவும் குடிநீர் கிடைக்கிறது. ஆனால் மீதமுள்ள மூன்று இடங்களில் 90 சதவீதம் பயன்படுத்த முடியாத நிலையில்தான் இருக்கின்றன.
இது குறித்து மெரினாவில் கடை வைத்திருக்கும் விக்னேஷ் என்பவரிடம் கேட்டபோது, “இரவு நேரத்தில் சில பசங்க வர்றாங்க… கும்பலா வந்து உடைச்சு போட்டுட்டு போயிடுவாங்க. அதுக்கப் பிறகு கார்ப்பரேஷன் ஆளுங்க வந்து சரி செஞ்சுட்டு போவாங்க. இது இதே மாதிரி தொடர்ந்து நடந்துகிட்டே இருந்ததுனால, இப்போதெல்லாம் கார்ப்பரேஷன் ஆளுங்களே அப்படியே விட்டுட்டாங்க. இப்ப அது பயன் இல்லாமல் சும்மாதான் இருக்கு” என வேதனை தெரிவித்தார்.
மெரினா குடிநீர் மையம்
அங்கு கடை வைத்திருக்கும் செல்வி என்பவரோ, “கும்பலா வந்து சில பேரு உடைக்கிறதும் நடக்குது. அதேபோல கடற்கரையில் உப்புத்தண்ணியில குளிச்சிட்டு நல்ல தண்ணில குளிக்கணும்னு இங்க வராங்க. அவங்கல்ல சிலர் அதை முறையாக பயன்படுத்த தெரியாம, அல்லது கவனம் இல்லாம பயன்படுத்தும்போது சில நேரங்கள்ல உடைஞ்சு போயிடுது. சில முறை மாத்தினாங்க. அப்புறம் அப்படியே தான் கிடக்குது” என்றார்.
முக்கியமாக, வெயில் காலத்தில், மக்கள் அதிகம் கூடும் இடமான மெரினா கடற்கரையில் இது போன்ற தண்ணீர் வசதி என்பது மிக அவசியமாக இருக்கிறது. அதை அரசு தரப்பிலிருந்து நிறைவேற்றியிருந்தாலும், பொதுமக்களில் சிலர் செய்யும் சில காரியங்களால் அதை தொடர்ந்து பயன்படுத்த முடியாமல் போகிறது. கையில் குறைந்தது பத்து ரூபாய் இருந்தால் மட்டும் தான் நம்மால் ஒரு இடத்தில் தண்ணீர் குடிக்க முடியும் என்கிற அவல நிலை. அதற்குக்கூட வசதி இல்லாத மக்களுக்கு இதுபோன்ற குடிநீர் மையங்கள் மிகவும் தேவையானதாகவும், அத்தியாவசியமாகவும் இருக்கிறது. அதை உணர்ந்து தான் அரசும் இதனை செயல்படுத்தியுள்ளது.
மெரினா குடிநீர் மையம்
அதனால் பொதுமக்களாகிய நாம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல், மற்றவர்களுக்கும் நமக்கும் உதவி பெறும் வகையில் இது போன்ற பொது சொத்துக்களை சேதம் விளைவிக்காமல் இருக்க வேண்டும். மேலும் குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருள்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒரு திட்டம் என்பது செயல்படுத்துவதற்கு அரசு தேவை… ஆனால், அந்த அரசு செயல்படுத்திய திட்டத்தை வெற்றி பெற வைப்பதில் பொதுமக்களின் பொறுப்பும் இருக்கிறது.
மெரினா குடிநீர் மையம்மெரினா குடிநீர் மையம்மெரினா குடிநீர் மையம்மெரினா குடிநீர் மையம்
தற்போதை நிலையை மாநகராட்சி நிர்வாகம் சரிசெய்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், பொதுமக்களும் பொறுப்புடன் கையாள வேண்டும் என்பதே உண்மையில் அதனை பயன்படுத்தும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
