Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran
மதுரை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியை சேர்ந்த சண்முகம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: புதுக்கோட்டை மாவட்டம், சங்கம்விடுதி கிராமத்தில் கடந்த ஏப். 25ல் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுசாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்தநீரை அருந்திய பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் ஆகியோர், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றினர். வழக்கு தொடர்பான ஆவணங்களை போலீசார் ஒரு வாரத்திற்குள் சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தவிட்டுள்ளனர்.
The post குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் appeared first on Dinakaran.