கோவை: கோவையில் குப்பை அகற்றப்படாதது குறித்து கேள்வி எழுப்பிய இளைஞர் கவுதம் மீது தாக்குதல் நடத்தியதாக கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தாக்குதலில் காயமடைந்த கவுதம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 23-வது வார்டு ரயில்வே காலனி பகுதியில், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தூய்மைப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் குப்பை தேங்கி, சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர் கவுதம் என்பவர், 23-வது வார்டு காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் கவிதா புருஷோத்தமனிடம் புகாரளித்துள்ளார். ஆனால், நடவடிக்கை எதுவும் இல்லாததால், அவர் மேட்டுப்பாளையம் நகராட்சியில் புகார் அளித்துள்ளார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
