நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக அவர் நடிப்பில் வெளியான வால்டர் வீரய்யா, வீரசிம்மா ரெட்டி, சலார் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்ததால் தனக்கான மார்க்கெட்டை ஸ்ருதி தக்க வைத்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ‘இனிமேல்’ ஆல்பத்தில் நடித்திருந்தார்.
‘தரம் தாழ்ந்த விமர்சனங்கள் காயப்படுத்துகின்றன..’: ஜி.வி.பிரகாஷ்
மேலும், சமீபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் தன் காதலரான ஷாந்தனு ஹசாரிகாவைப் பிரிந்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கவுள்ள ‘கூலி’ திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.