தில்லி மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரிய அரவிந்த் கேஜரிவாலின் கோரிக்கை மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்காது என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற பதிவாளர், ஜாமின் நீட்டிப்பு மனுவை விசாரணை நீதிமன்றத்தில் விண்ணப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
தில்லி மதுபானக் கொள்கை கொள்கை ’ஊழலில்’ தொடா்புடைய பணமோசடி வழக்கில் கைதான முதல்வா் கேஜரிவாலுக்கு மக்களவைத் தோ்தலில் பிரசாரம் செய்வதற்காக கடந்த மே 10-ஆம் தேதி உச்சநீதிமன்றம் 21 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
ஏழு கட்ட தோ்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிந்த ஒரு நாள் கழித்து, ஜூன் 2 ஆம் தேதி கேஜரிவால் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
பேட் பெர்ஃபாமன்ஸா? பெட் பெர்ஃபாமன்ஸா? பிகாரில் கல்வித் தரம்!
இந்த நிலையில், திடீரென குறைந்த உடல் எடை மற்றும் அதிக கீட்டோன் அளவுகள்‘ ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு பிஇடி-சிடி ஸ்கேன் உள்பட பல மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக தனது இடைக்கால ஜாமீனை மேலும் ஏழு நாள்களுக்கு நீட்டிக்கக் கோரி தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்தை உச்ச நீதிமன்ற விடுமுறை கால நீதிபதிகள் அமர்வு, கேஜரிவாலின் ஜாமீன் நீட்டிப்பு குறித்து தலைமை நீதிபதிகள் அமர்வு முடிவு செய்வார்கள் என்றும், இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் எந்த முடியும் எடுக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தில்லி முதல்வர் கேஜரிவாலின் இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரிய மனுவை “உச்ச நீதிமன்றம் விசாரிக்காது” என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற பதிவாளர், வழக்கமான ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை அனுகலாம் என தில்லி முதல்வருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் விசாரணை நீதிமன்றத்தை அனுகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
