Sorting by

×

Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran

திருவனந்தபுரம்: மகப்பேறு காலத்தை மகிழ்ச்சியாக மாற்றும் விதமாக கேரளாவில் கர்ப்பிணிகளுக்கான அழகி போட்டி நடைபெற்றது. இதில் நடிகை அமலாபால் கலந்து கொண்டு ஒய்யாரமாக நடந்து சென்று அசத்தினார். கொச்சியில் நடைபெற்ற கர்ப்பணிகளுக்கான அழகி போட்டியில் 150 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் விதவிதமான ஆடைகளை அணிந்தும், மேடையில் அணிவகுத்து நடந்து சென்று மகிழ்ந்தனர்.
மேலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை அமலாபாலும் மேடையில் ஒய்யாரமாக நடந்து சென்று பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். நிகழ்ச்சியின் முடிவில் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமதி அனிதா என்ற கர்ப்பிணி பட்டம் வென்றார். அவருக்கு இரண்டரை ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் 150 கர்ப்பிணிகள் கலந்து கொண்டதன் மூலமாக உலகில் அதிகளவில் கர்ப்பிணிகள் கலந்து கொண்ட அழகி போட்டியாக வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன் என்ற சாதனையில் இடம் பிடித்துள்ளது.
The post கேரளாவில் கர்ப்பிணிகளுக்கான அழகி போட்டியில் உற்சாகம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகை அமலாபால் appeared first on Dinakaran.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *