Sorting by

×

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஐபிஎல்லின் 53-ஆவது போட்டியில் ராஜஸ்தானும் கொல்கத்தாவும் ஈடன் கார்டன்ஸ் திடலில் மோதுகின்றன.

பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பிலிருந்து வெளியேறிய ராஜஸ்தான் அணி மீதமுள்ள போட்டிகளில் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.

கொல்கத்தா அணி தனது ப்ளே ஆஃப் வாய்ப்ப தக்க வைக்க இந்தப் போட்டி முக்கியமானது.

இரு அணிகளும் 29 முறை மோதியுள்ளன. அதில் கொல்கத்தா 15 முறையும் ராஜஸ்தான் அணி 14 முறையும் வென்றுள்ள நிலையில் கேகேஆர் தனது எக்ஸ் பக்கத்தில் 16-14என மாற்ற வேண்டுமெனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது.

புள்ளிப் பட்டியலில் 7-ஆவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி முக்கியமான வெற்றிக்காக காத்திருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக், குணால் ரத்தோர், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மயர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, யுத்வீர் சிங், ஆகாஷ் மத்வால்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே, ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, மொயீன் அலி, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *