லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் ’கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
விஜய் சேதுபதி 51: படத் தலைப்பு டீசர் வெளியீடு!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், விஜய் பாடிய முதல் பாடல் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்தியா, ரஷியாவில் கோட் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் படப்பிடிப்புக்காக கடந்த வாரம் வெளிநாடு புறப்பட்டுச் சென்றார்.
சமீபத்தில் படத்துக்கு பிந்தைய பணிகள் தொடங்கியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு அமெரிக்காவில் லோலா விஎஃப் எக்ஸ் நிறுவனத்தில் நடிகர் விஜய் உடனான விஎஃப் காட்சிகள் நிறைவடைந்ததாகவும் இதன் இறுதிப் பகுதியை பார்க்க ஆவலாக உள்ளதாகவும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
