Sorting by

×

கோவை மாவட்டத்தைக் கைப்பற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

கோவை
கோவை

திமுக கூட்டணியில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 3 தொகுதிகளை கூட்டணிக்குக் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். அதிமுக கூட்டணியில் 1-2 தொகுதிகள் கூட்டணிக்குச் செல்ல வாய்ப்புள்ளது.

அதிமுகவில் வால்பாறை, கிணத்துக்கடவு, கோவை வடக்கு தொகுதிகளைத் தவிர மீதியுள்ள தொகுதிகளில் சிட்டிங் எம்எல்ஏக்களுக்கே மீண்டும் வாய்ப்பு கொடுக்க முடிவு செய்துள்ளனர். திமுகவில் கடந்த மார்ச் 19-ம் தேதி வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது.

வேலுமணி
வேலுமணி

மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள், மாவட்டச் செயலாளர்கள் எனப் பலர் முட்டி மோதி வருகிறார்கள். கோவை தெற்கு தொகுதியில் அதிக கவனம் செலுத்தி வந்த ராஜீவ் காந்தி கோவை வடக்கு தொகுதி நேர்காணலில் கலந்துள்ளார்.

சில நிர்வாகிகள் 2-3 தொகுதிகளுக்கு விருப்ப மனுக்கள் கொடுத்துள்ளனர். ஆனால் ஒரு தொகுதிக்கான நேர்காணலில் மட்டும் பங்கேற்க வேண்டும் என்று கூறியதால், கடைசி நேரத்தில் பல நிர்வாகிகள் நேர்காணல்களில் மாறி மாறி அமர்ந்துள்ளனர்.

வேட்பாளர் நேர்காணல்
வேட்பாளர் நேர்காணல்

இன்னும் ஒரு வாரத்தில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கவுள்ள நிலையில்,  திமுகவில் இப்போதுவரை வேட்பாளர்கள் யார் என்று உடன்பிறப்புகளே அறிய முடியாதளவுக்கு சஸ்பென்ஸ் நிலவுகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், கொமதேக, சிபிஎம், சிபிஐ, தேமுதிக, மநீம, ஆதி தமிழர் பேரவை உள்ளிட்டோர் கோவையில் சீட் எதிர்பார்க்கிறார்கள்.

மொத்தமுள்ள 10 தொகுதிகளில், சிங்காநல்லூர் (சிபிஎம்), கிணத்துக்கடவு (காங்கிரஸ்), பொள்ளாச்சி அல்லது சூலூர் (கொமதேக) என்று முடிவாகியுள்ளது. மீதமுள்ள 7 தொகுதிகளில் திமுக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

இதுகுறித்து கோவை திமுக உடன்பிறப்புகளிடம் பேசியபோது, “செந்தில் பாலாஜி கைக்காட்டுபவர்கள்தாம் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவார்கள். கடந்த 2022 உள்ளாட்சித் தேர்தலில் பலர் கோவை மேயர் பதவிக்கான ரேஸில் இருந்தபோது கட்சிக்காரர்களே அதிகம் அறியாத கல்பனாவை செந்தில் பாலாஜி மேயராக்கினார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு கோவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கணபதி ராஜ்குமாரும் அப்போது லைம்லைட்டில் இல்லாதவர்தான்.

ஊடக வெளிச்சமில்லாத, தனக்கு விசுவாசமானவர்களை சைலன்டாகத் தேர்வு செய்வதுதான் செந்தில் பாலாஜி ஸ்டைல். அந்த அடிப்படையில்தான் இந்த முறையும் கோவைக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்துள்ளார்.

 செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

கோவை திமுகவில் 3 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு சிலருக்கு கல்தா கொடுப்பதற்கும் வாய்ப்புள்ளது. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் பல சர்ப்ரைஸ்கள் உள்ளன” என்றனர் உறுதியாக.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *