தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் செல்வராஜ் (15). இதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் ஸ்ரீராம் (15) இவர்கள் இருவரும் சங்கரன்கோவில் – ராஜபாளையம் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு முடித்துள்ளனர். தெற்குபனவடலியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் வீரபாண்டி (17). இவர் பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இன்று மாலையில் இவர்கள் 3 பேரும் சங்கரன்கோவிலுக்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
