சென்னை: "சட்டம் ஒழுங்கை கேலிக்கூத்தாக்கி இருப்பதே திமுகவின் 3 ஆண்டுகால சாதனை" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள், புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டியும், பொதுநல வழக்கு தொடர்ந்தும் போராடி வந்த சமூக ஆர்வலர் பெர்ட்டின் ராயன் என்பவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தாக்குதல் நடந்து 10 நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
