Sorting by

×

Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran

திருவனந்தபுரம்: திருவண்ணாமலையை சேர்ந்த 15 பக்தர்கள் ஒரு மினி பஸ்சில் சபரிமலைக்கு சென்றனர். இவர்கள் தரிசனத்தை முடித்துவிட்டு நேற்று மதியம் ஊருக்கு புறப்பட்டனர். பத்தனம்திட்டா அருகே துலாப்பள்ளி பகுதியில் ஒரு இறக்கமான பாதையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் பஸ்சுக்குள் இருந்தவர்கள் அனைவரும் காயமடைந்தனர். போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு எருமேலி மற்றும் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி பிரவீன் (4) என்ற சிறுவன் உயிரிழந்தான். ஆபத்தான நிலையில் உள்ள 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post சபரிமலை அருகே தமிழக பக்தர்கள் சென்ற மினி பஸ் கவிழ்ந்து விபத்து: 4 வயது சிறுவன் பலி: 5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *